Flipkart’s Black Friday Sale: ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் அல்லது வேறு ஏதேனும் கேஜெட் வாங்குவது பற்றி நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு தற்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இவற்றை நல்ல தள்ளுபடியுடன் குறைந்த விலையில் வாங்க இப்போது நேரம் வந்துவுட்டது. உங்களுக்காகவே பிளிப்கார்ட் ஒரு அற்புதமான சேலை கொண்டு வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கான ஒரு பெரிய விற்பனையுடன் வருகிறது. ஆம்!! பிளிப்கார்ட்டில் முதன் முறையாக, பிளாக் ஃப்ரைடே சேல் தொடங்க உள்ளது. இதன் மூலம் மலிவான விலையில் அதிகமாக ஷாப்பிங் செய்து மகிழலாம்.
பிளிப்கார்ட்டின் இந்த விற்பனை நவம்பர் 24 முதல் நவம்பர் 29 வரை லைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் தற்போது சேல் பேஜை லைவ் ஆக்கி சில டீல்கள் மீதான திரையையும் நீக்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்வதற்கான பெரிய மற்றும் மலிவான வாய்ப்பைப் பெறுவது உறுதி. பிளிப்கார்ட்டின் இந்த சேல் மூலம் ஆயிரக்கணக்கான ரூபாயை சேமிக்கவும் முடியும்.
பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் எந்தெந்த சாதனங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும் என்று இங்கே காணலாம்.
Flipkart’s Black Friday Sale: ஸ்மார்ட்போன்களில் அதிக சலுகைகள்
பிளிப்கார்ட்டின் இந்த Black Friday விற்பனையின் போது, ஐபோன்களுக்கு அதிக தள்ளுபடி கிடைக்கின்றது. உங்கள் இதயத்தை மகிழ்விக்கும் மிகப்பெரிய டீலுடன் வாங்குவதற்கு ஐபோன் 15 ஐ நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இந்த விற்பனையில், Realme P1 Pro 5G, Moto G 85.5 G, Vivo T3 Pro உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
Flipkart Black Friday Sale: மடிக்கணினிகளில் 80% வரை தள்ளுபடி
Flipkart இன் இந்த பிளாக் ஃப்ரைடேசேலில், லேப்டாப்களை வாங்க விரும்பினால், நம்ப முடியாத 80% தள்ளுபடியுடன் அவற்றை பெற முடியும். இந்த லேப்டாப்களின் ஆரம்ப விலை ரூ.9,990 முதல் தொடங்கும். வாடிக்கையாளர்கள் அவற்றை ஆன்லைனில் எளிதாக வாங்கலாம். மேலும், வெறும் 89 ரூபாய்க்கு லேப்டாப் பாகங்களை வாங்கலாம்.
Flipkart Black Friday Sale: டிவி மற்றும் உபகரணங்களுக்கு 75% தள்ளுபடி
Flipkart Black Friday Sale -இல், டிவி மற்றும் உபகரணங்களுக்கு 75% வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்தக் குளிர் காலத்தில் வாஷிங் மிஷின் அல்லது கீசர் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், அதை இப்போது மலிவாக வாங்கலாம். மேலும், இந்த விற்பனையில், நீங்கள் பல வித டிவிகளை ரூ.7,000 என்ற தொடக்க விலையிலும் வாங்கலாம்.
பிளாக் ஃப்ரைடே சேல் Amazon, Tata Cliq, Myntra மற்றும் Miniso ஆகியவற்றிலும் நேரலையில் உள்ளது. இப்படிப்பட்ட விற்பனைகளில் வாடிக்கையாளர்கள் சமீபத்திய கேஜெட்டுகள், நவநாகரீக ஃபேஷன் அல்லது வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு இயந்திரங்கள் ஆகியவற்றை மிகக் குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பை பெறுகிறார்கள்.