Elephant Video Latest | யானைகளின் வீடியோ அண்மைக்காலமாக சோஷியல் மீடியாக்களில் அதிகம் வைரலாகி வருகிறது. ஊருக்குள் புகும் யானைகளை மக்கள் மீண்டும் விரட்டியடிப்பது, யானைகள் குடியிருப்புகளுக்கு புகுந்து உணவுகளை எடுப்பது போன்ற வீடியோக்கள் அதிகம் பரவுகின்றன. சில யானைகள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் காட்சிகளைக் கூட மக்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ வேறுமாதிரியானது. யானைகளின் இன்னொரு பக்கத்தை படம் பிடித்து காட்டும் வீடியோவாக இருக்கிறது. கண்ணீர் விட்டு யானை அழும் வீடியோ, தன்னுடைய குட்டி இறந்தது தெரியாமல் அதனை எழுப்புவதற்கு நடத்திய பாசப்போராட்டத்தின் வீடியோ அது. யானையின் இந்த உணர்ச்சிமிக்க பாசப்போராட்டத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆம், யானையின் குட்டி இறந்துவிட்டது. ஆனால் அது தாய் யானைக்கு தெரியவில்லை. அந்த யானையை எழுப்ப போராடுகிறது. ஆனால் முடியவில்லை. இருப்பினும் தாய் யானை குட்டி யானையை எழுப்பி கூட்டிக் செல்லாமல், அங்கிருந்து நகரமாட்டேன் என என்னவெல்லாம் அதனால் முடியுமோ, அதனை முயற்சிக்கிறது. தும்பிக்கையில் வைத்து முட்டுகிறது. தூக்கி நிறுத்த முயல்கிறது. ஆனால் குட்டி யானை இறந்துவிட்டதால், அது எப்படி எழுந்து நிற்கும். யானைக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, சில மணி நேரங்கள் கழித்து வேண்டுமானால் குட்டி யானை உயிரிழந்தது குறித்து உணர்ந்திருக்கலாம். ஆனால் அந்த நொடியில் குட்டி யானையை விடாத தாய் யானை, தன்னுடைய தும்பிக்கையில், அதனுடைய தும்பிக்கையை பிடித்து கூடவே இழுத்துச் செல்லவும் தொடங்கியது.
தாய் யானை பாசப்போராட்டம் வைரல் வீடியோ
November 22, 2024
இந்த பாசப்போராட்டம் மிகுந்த வீடியோவை இந்திய வன சேவை (IFS) அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது சமூக ஊடக பக்கமான X-ல் பகிர்ந்துள்ளார். கூடவே, தாய் யானையின் பாசப்போராட்டத்துக்கு தன்னுடைய ஒரு கேப்சனும் எழுதியிருக்கிறார். அதில், தாயின் தியாகத்துக்கும், அன்புக்கும் யாரும் நிகரில்லை என்பதை யானையின் பாசப்போராட்டம் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். யானையின் இந்த பாசப்போராட்டத்தின் வீடியோவை பார்த்த பலரும் உணர்ச்சி பெருக்குடன் பகிர்ந்ததால் இப்போது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இதுவரை சுமார் 1 லட்சத்து 68 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
எல்லோரும் யானையின் நிலையை தங்களால் உணர முடிவதாகவும், யானை ஒரு விலங்கு என்றாலும் அதனுடைய பாசப்போராட்டம் தாயின் அன்பு விலங்குகள் இடத்தில் கூட இருக்கும் என்பதை நிரூபிப்பதாகவும் கூறியுள்ளனர். விலங்கு, பறவை என எதுவானாலும் தாயின் குணங்கள் என்பது மனிதர்களுக்கு நிகராகவே இருப்பாதகவும் தெரிவித்துள்ளனர்.