புரோ கபடி லீக்; ஜெய்ப்பூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தபாங் டெல்லி

நொய்டா,

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெல்லி அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்து அசத்தியது.

இறுதியில் ஆட்ட நேர முடிவில் தபாங் டெல்லி 35-21 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.