இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சித்து தனது மனைவி கடுமையான உணவு முறையை பின்பற்றி புற்றுநோயை முறியடித்ததாக கூறியிருந்தார். புற்றுநோயை குணப்படுத்துவது குறித்த இவரின் கருத்து “நிரூபிக்கப்படாதது” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதுடன் “நிரூபிக்கப்படாத வைத்தியங்களை” பின்பற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். பால் பொருட்கள் மற்றும் சர்க்கரையை சாப்பிடாமல் தவிர்த்து ஹல்டி (மஞ்சள்) மற்றும் வேம்பு ஆகியவற்றை சாப்பிட்டது தனது மனைவியின் ‘குணப்படுத்த முடியாத’ புற்றுநோயை குணப்படுத்த உதவியது என்று […]