மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது; உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி

கியேவ்,

ரஷியா-உக்ரைன் போர் நடைபெற்றுவருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழாவில் உக்ரைன் முன்னாள் ராணுவத் தளபதி ஜலுஷ்னி கூறுகையில்;

ரஷியா-உக்ரைன் மோதலில் ரஷியாவின் நட்பு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டிருப்பது மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்று அர்த்தம் என்று பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் “2024-ம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. 10,000 வட கொரிய ஆயதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் குர்ஸ்க் பகுதியில் நிலைநிறுத்தியிருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக ஈரானின் டிரோன்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே உக்ரைனில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் போரில் தாக்குப்பிடித்து இருக்கிறது. ஆனால், போரில் தனியாக வெல்லுமா என்று உறுதியாக கூறமுடியாது. வட கொரியாவைச் சேர்ந்த வீரர்கள் உக்ரைனுக்கு முன்னாள் உள்ளனர். உக்ரைனில், ஈரானிய வீரர்கள் பொதுமக்களை எந்தவித பாரபட்சம் இல்லாமல் கொல்கிறார்கள். உக்ரைனின் ஆதரவாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போர் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.

ஆனால் உக்ரைன் போரை நிறுத்துவதுகூட இன்னும் சாத்தியம்தான். சில காரணங்களால், எங்கள் ஆதரவாளர்கள் இதை புரிந்து கொள்ள விரும்பவில்லை. உக்ரைனுக்கு ஏற்கனவே பல எதிரிகள் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் வலேரி ஜலுஷ்னி, உக்ரைனின் ராணுவ மற்றும் அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார். ரஷியா- உக்ரைன் போரில் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஜலுஷ்னி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த பிப்ரவரியில் ராணுவத் தளபதியாக இருந்த ஜலுஷ்னியை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்தது. மேலும், ஜலுஷ்னியின் வளர்ந்து வரும் புகழ் அவரை ஜெலென்ஸ்கிக்கு அரசியல் போட்டியாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.