மேட்ச் பிக்சிங்: டென்னிஸ் வீரர்களுக்கு 3 ஆண்டுகள் தடை

லண்டன்,

நைஜீரியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர்கள், சிவெஸ்டர் இம்மானுவேல், கிறிஸ்டின் பால், ஹெண்ட்ரி சட்செ. இவர்கள் பெல்ஜியத்தில் செயல்பட்டு வரும் சூதாட்டம், மெட்ச் பிக்சிங்க் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு அமைப்பு விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் 3 வீரர்களும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, 3 வீரர்களுக்கும் தலா 10 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட வீரர்கள் இம்மானுவேல், கிறிஸ்டின் பால் ஆகிய 2 பேரும் 3 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வீரரான ஹெண்ட்ரி சட்செ 2.5 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட டென்னிஸ் வீரர்கள் மூன்றுபெரும் சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதல் ஆயிரம் வீரர்களுக்கு வெளியே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.