மதுரை: வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், பொதுமக்களும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள், விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே நெல்லையின் அடையாளமாக உள்ள தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதற்கு எதிராக உயர் […]
