ஆர்.ஜே பாலாஜி, செல்வராகவன், நட்டி, கருணாஸ், சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடித்த ‘சொர்க்க வாசல்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கி, கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இப்படம் சிறை வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.
ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சித்தார்த் விஷ்வநாத் எங்க ஸ்கூல் ஜூனியர். அவருக்கு சினிமால ஆர்வம் இருக்குனு தெரியாது. திடீர்னு வந்து படம் டைரக்ட் பண்ணனும்னு சொன்னார்.
அப்புறம் மூனு படத்துல அசிஸ்டன்ட் டைரக்டரா வேலை செய்துட்டு இருந்தார். திடீர்னு இந்தப் படத்தோட கதை எடுத்துட்டு எங்கிட்ட வந்தார். படத்தோட கதை சொன்னதும், இதுல யார் நடிச்சா நல்லா இருக்கும்னு கேட்டார். நான்தான் என் நண்பர் ஆர்.ஜே பாலாஜி நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னேன். இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சி. நான் மியூசிக் ஆரம்பிக்கும்போது பாலாஜி எஃப்.எம் ல கொடி கட்டிப் பறந்திட்டு இருந்தார். அப்படி ஆரம்பிச்சவர் இப்போ இவ்ளோ பெரிய ஹீரோவா மாறியிருக்கார்னா அது சாதரண விஷயம் இல்லை. அவரோட கடின உழைப்பு. அவரை காமெடி பண்ற ஒரு ஆளாதான் பார்த்திருக்கோம். ஆனா இந்தப் படம் அவரோட டிரான்ஸ்பர்மேஷனை காட்டும்.
இந்தப் படக் குழுவுக்கு என்னோட வாழ்த்துகள். இந்தப் படத்துக்கு செல்வராகவன் பெரிய பில்லர். என்னோட மியூசிக்கை நிறைய ஷேப் பண்ணதுல செல்வா சாரோட பெரிய சப்போர்ட் இருக்கு. அதுக்கும் இந்தப் படத்துக்கும் வாழ்த்தும் நன்றியும்” எனப் பேசினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…