உங்களின் இன்ஸ்டா ரீல்ஸ் அடிக்கடி வைரலாக வேண்டுமா… இந்த 4 விஷயத்தை கண்டிப்பா பண்ணுங்க

Tech Tips To Make Instagram Reels Viral: இன்ஸ்டாகிராம் என்பதுதான் தற்போது இளைஞர்களின் உறைவிடமாக இருக்கிறது. அவர்கள் சாப்பிடுவது தொடங்கி, உடுத்தும் உடை, பயன்படுத்தும் அனைத்தும் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட தாக்கம் நிச்சயம் தெரியும். அதாவது, எந்த கடைக்கு எப்போது போய் சாப்பிடலாம், எங்கெங்கு நல்ல விலையில் டிரெண்டிங்காக தரமான துணிமணிகள் கிடைக்கும் போன்ற அனைத்தையும் இளசுகள் இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்துதான் தெரிந்துகொள்கின்றனர். அதுவும் பேச்சிலர்கள் சமையலுக்கும் ரீல்ஸ் பேரூதவியாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்கு உங்களுக்கு உயர் தர கேமரா இருக்க வேண்டும் என்றில்லை, மொபைல் கேமராவிலேயே எடுத்து, அதிலேயே எடிட்டும் செய்தும் நீங்கள் ரீல்ஸ் போடலாம். ரீல்ஸ் அதிக கவனத்தை பெறுவதற்கு அதன் உள்ளடக்கம்தான் முதல் காரணம். குறைவான நேரத்தில் தரமான உள்ளடக்கத்தை தருபவர்களுக்கு இன்ஸ்டா பயனர்கள் குவிவார்கள். அதே நேரத்தில் இன்ஸ்டாவில் நீங்கள் ஓரிரு நொடிகளுக்கு சுவாரஸ்யமற்ற, படைபூக்கம் அற்ற விஷயங்களை பதிவேற்றினால் சீண்ட கூட மாட்டார்கள்.

வைரலாக 4 வழிமுறைகள்

ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்கள் அனைவருமே தற்போது இன்ஸ்டாவை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இளசுகள் மட்டுமின்றி பெருசுகளும் இன்ஸ்டாவை எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். நகர் புறங்களை தாண்டி கிராமப்புறங்களை சேர்ந்தவர்களும் புதுமையாக பல்வேறு உள்ளடக்கங்களுடன் ரீல்ஸ் போட்டு லைக்ஸை அள்ளுகின்றனர். லைக்ஸை எடுத்து அதை விளம்பரங்களுக்கு பயன்படுத்தி வருமானமும் பார்க்கின்றனர். இதனால் பலரும் ரீல்ஸ் போட தொடங்கிவிட்டனர். ஒவ்வொருவருக்கும் அதை எப்படியாவது வைரலாக்கிவிட வேண்டும் என்றும் தோன்றும். இந்நிலையில், இந்த 4 நான்கு வழிமுறைகளை பின்பற்றினால் நிச்சயம் உங்களின் ரீல்ஸ் வீடியோக்களும் அடிக்கடி வைரலாகும்.

டிரெண்ட்டை புரிந்துகொள்ள வேண்டும்

இன்ஸ்டாவில் தற்போது என்ன டிரெண்ட் என்பதில் நீங்கள் புரிதல் கொண்டிருக்க வேண்டும். என்ன சூழல் நிலவுகிறது, எதை குறிவைத்து அதிகம் வீடியோக்கள், ரீல்ஸ், மீம்ஸ்கள் போடப்படுகிறது என்பது தெரிந்துகொள்ள வேண்டும். டிரெண்டிங் ரீல்ஸில் நீங்களும் உங்களின் ரீல்ஸை பதிவிட்டால், பயனர்கள் அந்த டிரெண்டிங்கை கிளிக் செய்யும்போது உங்களின் வீடியோவும் முன்னால் வர வாய்ப்புள்ளது. உங்கள் நட்பு வட்டத்தில், பாலோயர்கள் வட்டத்தில் அதிகம் லைக் செய்யப்படும்போது அது இன்னும் பல பேரின் ஃபீட்களில் வர துவங்கும். இதை தொடர்ச்சியாக செய்யும்போது நிச்சயம் உங்கள் வீடியோக்கள் வைரல் ஆகலாம். தொடர்ச்சியாக ரீல்ஸ்களுக்கு வீடியோக்களும் வரும். 

டிரெண்டிங் மியூஸிக்களை பயன்படுத்தவும்…

ஒரு பாட்டு அல்லது ஒரு பாட்டின் ஒரு பகுதி டிரெண்டிங்கில் இருந்தால் அதனை பயன்படுத்தி ஒரு ரீல்ஸ் போடுங்கள். இதுவும் உங்களுக்கு நிச்சயம் கைக்கொடுக்கும். அதேநேரத்தில் உங்களுக்கு என தனித்துவமான ஸ்டைலை வைத்திருந்தால் நிச்சயம் உங்கள் மீது கவனம் குவியும். இதன்மூலம் உங்களின் வீடியோ வைரலாகும் வாய்ப்பும் அதிகமாகும்.

வீடியோவின் தரம் முக்கியம்

தரமாக இருக்க வேண்டும் என்றால் ஐபோனில்தான் எடுக்க வேண்டும் என்றில்லை. நல்ல ஒளி, ஒலி அமைப்பில் நிதானமாக எடுத்தாலே போதுமானது. அதேநேரத்தில் வீடியோவை செங்குத்தாக எடுத்தால் நல்லது. அதுவே இன்ஸ்டா ரீல்ஸ்களில் பயனர்களால் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கிடைமட்டமாக வீடியோ இருந்தால், வீடியோவை ஒரு நொடி கூட பார்க்காமல் மேலே தள்ளிவிடுவார்கள். எனவே, வைரலாவதற்கும், அதிக பயனர்களை கொண்டுவதற்கும் இதுவும் முக்கியமாகும்.

வீடியோவில் எழுத்து

அதேபோல், வீடியோவில் மீம்ஸ்களை போல் எழுத்து வரும்படி எடிட் செய்யுங்கள். அதாவது, உங்கள் வீடியோவை கவரும் வகையில் அது இருந்தால் நிச்சயம் பயனர்களால் விரும்பப்படும். அதேநேரத்தில், ஹேஷ்டேக், கேப்ஷன்களும் முக்கியம். இதுவும் பயனர்களை உங்கள் ரீல்ஸ் நோக்கி இழுக்கும். இந்த நான்கு டிப்ஸ்களையும் தொடர்ந்து செய்யும்போது, அடிக்கடி உங்களின் ரீல்ஸ் வைரலாக தொடங்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.