ஸ்மார்ட்போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி, அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. கடந்த 80-90 களைப் போல தொலைபேசி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இல்லாமல், காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கும் வரை அனைத்து பணிகளுக்கும் ஸ்மார்ட்போன் தேவைப்படுகிறது. இன்றைய உலகில், நமது வாழ்க்கையை ஸ்மார்ட்போன்கள் தான் இயக்குகின்றன.
இந்நிலையில், போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல் மிக முக்கிய நேரத்தில் பேட்டரி காலியாவது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். பேட்டரி நமது ஸ்மார்ட்போனுக்கு உயிர் கொடுக்கும் பேட்டரி நீடித்து இருந்தால், பிரச்சனை ஏதும் இல்லாமல் (Tech Tips) இருக்கலாம் . இந்நிலையில், போன் பேட்டரி சீக்கிரம் காலியாவதை தவிர்க்க கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
திரை பிரகாசம்
தொலைபேசியின் பேட்டரியை காலி செய்யும் முக்கிய காரணிகளில் ஒன்று திரையின் பிரகாசம். போனின் வெளிச்சத்தை குறைவாக பராமரிக்க ஆட்டோ ப்ரைட்னஸ் அம்சத்தை இயக்கவும், இதனால் ஃபோனின் திரையின் பிரகாசம் சூழ்நிலைக்கு ஏற்ப தானாகவே அட்ஜஸ் செய்து கொள்ளும். திரையின் பிரகாசத்தை குறைந்த நிலையில் வைத்திருந்தாலும், ஃபோனின் பேட்டரி ஆயுளை கணிசமாக நீட்டிக்க முடியும். செட்டிங்க்ஸ் > காட்சி > பிரகாசம் என்பதற்குச் சென்று, ஸ்லைடரை உங்களுக்கு வசதியாக இருக்கும் குறைவான நிலையில் செட் செய்யலாம்.
பின்னணி இயங்கும் செயலிகளை மூடவும்
நீங்கள் பயன்படுத்தாத செயலிகளை மூடுவதிஒனால், அதிக அளவிலான பேட்டரியை சேமிக்கலாம். இது பேட்டரியைச் சேமிக்க உதவும். பின்னணியில் இயங்கும் செயலிகள்: போனில் பின்னணியில் இயங்கும் செயலிகள் அதிக பேட்டரி சக்தியை பயன்படுத்துகிறது. மேலும், நீங்கள் அதிகம் பயன்படுத்தாத செயலிகளை மூடுவதும், அத்தியாவசியமற்ற செயலிகளுக்கான நோட்டிபிகேஷனை முடக்குவதும் நல்ல பலன் தரும்.
புளூடூத் மற்றும் வைஃபையை முடக்கவும்
போனில் உள்ள புளூடூத் மற்றும் வைஃபை அம்சங்களை தேவையில்லாத போது, ஆஃப் செய்து வைத்தால், பேட்டரி அதிக நேரம் நீடிக்கும். இந்த அம்சங்கள் ஆன் நிலையில் இருந்தால், அவை புளூடூத் மற்றும் வைஃபை இணைப்புகள் அருகில் வரும் போது அதை அடையாளம் கண்டறிவதால், பேட்டரி அதிகம்ம் செலவாகும்.
பவர் சேவிங் மோட் அம்சத்தை ஆக்டிவேட் செய்தல்
போனில் உள்ள பவர் சேவிங் மோட் அம்சம் பேட்டரியை சேமிக்க உதவுகிறது. போனில் பேட்டரி குறைவாக இருக்கும் போது இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். அதை ஆக்டிவேட் செய்வதன் மூலம், மீதமுள்ள பேட்டரியை நீண்ட நேரம் பயன்படுத்தலாம். பின்னணியில் இயங்கும் செயலிகளை கட்டுப்படுத்துதல், திரையின் பிரகாசத்தைக் குறைத்தல் ஆகியவை இதன் மூலம் செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பேட்டரி சேவர் அம்சம் உள்ளது.