IPL Auction Live 2024: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 மெகா ஏலம் இன்று இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவை தாண்டி வெளியே நடக்கக்கூடிய இரண்டாவது ஐபிஎல் ஏலம் இதுவாகும். இதற்கு முன்பு ரியாத்தில் நடைபெற்றது, தற்போது சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இந்த ஆண்டு ஏலம் நடைபெறுகிறது. ஐபிஎல் ஏலம் நடைபெறும் அபாடி அல் ஜோஹர் அரங்கு வெறும் 79 நாட்களில் கட்டப்பட்ட இடம் ஆகும். இங்கு 5,000 இருக்கைகள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நிற்கும் வசதி உள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கும் முன்பு ஒவ்வொரு அணியிடமும் எவ்வளவு தொகை மீதம் உள்ளது, யார் யாரை தக்க வைத்துள்ளனர் என்று பார்ப்போம்.
10 அணியும் தக்க வைத்துக்கொண்ட வீரர்கள்:
மும்பை இந்தியன்ஸ்: 5 வீரர்களை தக்கவைத்துள்ளனர்.
ஜஸ்பிரித் பும்ரா: 18 கோடி
சூர்யகுமார் யாதவ்: 16.35 கோடி
ஹர்திக் பாண்டியா: 16.35 கோடி
ரோஹித் சர்மா: 16.30 கோடி
திலக் வர்மா: 8 கோடி
மீதமுள்ள தொகை: 55 கோடி
ஏலத்தில் உள்ள RTM விருப்பங்கள்: 1
சென்னை சூப்பர் கிங்ஸ்: 5 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
ருதுராஜ் கெய்க்வாட்: 18 கோடி
மதீஷா பத்திரனா: 13 கோடி
சிவம் துபே: 12 கோடி
ரவீந்திர ஜடேஜா: 18 கோடி
எம்எஸ் தோனி: 4 கோடி
மீதமுள்ள பர்ஸ்: 55 கோடி
ஏலத்தில் உள்ள RTM விருப்பங்கள்: 1
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: 3 வீரர்களை தக்கவைத்துள்ளனர்.
விராட் கோலி: 21 கோடி
ரஜத் படிதார்: 11 கோடி
யாஷ் தயாள்: 5 கோடி
மீதமுள்ள பர்ஸ்: 83 கோடி
ஏலத்தில் உள்ள RTM விருப்பங்கள்: 3
டெல்லி கேபிட்டல்ஸ்: 4 வீரர்களை தக்கவைத்துள்ளனர்.
அக்சர் படேல்: 16.5 கோடி
குல்தீப் யாதவ்: 13.25 கோடி
டிரிஸ்டன் ஸ்டப்ஸ்: 10 கோடி
அபிஷேக் போரல்: 4 கோடி
மீதமுள்ள பர்ஸ்: 73 கோடி
ஏலத்தில் உள்ள RTM விருப்பங்கள்: 2
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 6 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.
ரிங்கு சிங்: 13 கோடி
வருண் சக்கரவர்த்தி: 12 கோடி
சுனில் நரைன்: 12 கோடி
ஆண்ட்ரே ரசல்: 12 கோடி
ஹர்ஷித் ராணா: 4 கோடி
ராமன்தீப் சிங்: 4 கோடி
மீதமுள்ள பர்ஸ்: 51 கோடி
ஏலத்தில் உள்ள RTM விருப்பங்கள்: 0
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: 5 வீரர்களை தக்கவைத்துள்ளனர்.
நிக்கோலஸ் பூரன்: 21 கோடி
ரவி பிஷ்னோய்: 11 கோடி
மயங்க் யாதவ்: 11 கோடி
மொஹ்சின் கான்: 4 கோடி
ஆயுஷ் படோனி: 4 கோடி
மீதமுள்ள பர்ஸ்: 69 கோடி
ஏலத்தில் உள்ள RTM விருப்பங்கள்: 1
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 5 வீரர்களை தக்கவைத்துள்ளனர்.
பேட் கம்மின்ஸ்: 18 கோடி
அபிஷேக் சர்மா: 14 கோடி
நிதீஷ் ரெட்டி: 6 கோடி
ஹென்ரிச் கிளாசென்: 23 கோடி
டிராவிஸ் ஹெட்: 14 கோடி
மீதமுள்ள பர்ஸ்: 45 கோடி
ஏலத்தில் உள்ள RTM விருப்பங்கள்: 1 அன்கேப் பிளேயர்
குஜராத் டைட்டன்ஸ்: 5 வீரர்களை தக்கவைத்துள்ளனர்.
ரஷித் கான்: 18 கோடி
சுப்மான் கில்: 16.5 கோடி
சாய் சுதர்சன்: 8.5 கோடி
ராகுல் தெவாடியா: 4 கோடி
ஷாருக்கான்: 4 கோடி
மீதமுள்ள பர்ஸ்: 69 கோடி
ஏலத்தில் உள்ள RTM விருப்பங்கள்: 1
பஞ்சாப் கிங்ஸ்: 2 வீரர்களை தக்கவைத்துள்ளனர்.
ஷஷாங்க் சிங்: 5.5 கோடி
பிரப்சிம்ரன் சிங்: 4 கோடி
மீதமுள்ள பர்ஸ்: 110.5 கோடி
ஏலத்தில் உள்ள RTM விருப்பங்கள்: 4
ராஜஸ்தான் ராயல்ஸ்: 6 வீரர்களை தக்கவைத்துள்ளனர்.
சஞ்சு சாம்சன்: 18 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால்: 18 கோடி
ரியான் பராக்: 14 கோடி
துருவ் ஜூரல்: 14 கோடி
ஷிம்ரோன் ஹெட்மியர்: 11 கோடி
சந்தீப் சர்மா: 4 கோடி
மீதமுள்ள பர்ஸ்: 41 கோடி
ஏலத்தில் உள்ள RTM விருப்பங்கள்: 0
10 அணிகளிடம் மீதமுள்ள பர்ஸ் தொகை
பஞ்சாப் கிங்ஸ் – ₹110.5 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ₹83 கோடி
டெல்லி கேப்பிடல்ஸ் – ₹73 கோடி
குஜராத் டைட்டன்ஸ் – ₹69 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ₹69 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் – ₹55 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ₹51 கோடி
மும்பை இந்தியன்ஸ் – ₹45 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ₹45 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் – ₹41 கோடி