IPL Mega Auction Live: சாம்பியன் பவுலரை வாங்கிய பெங்களூரு அணி!

சாம்பியன் பவுலரை வாங்கிய பெங்களூரு அணி!

Suyash Sharma |சுயாஷ் சர்மா

நடப்பு ஐ.பி.எல் சாம்பியன் கொல்கத்தா அணியில் கடந்த ஆண்டு சிறப்பாக பந்துவீசிய ஸ்பின் பவுலர் சுயாஷ் சர்மாவை பெங்களூரு அணி ரூ. 2.60 கோடிக்கு வாங்கியது. அவரைத் தொடர்ந்து, கரண் சர்மாவை ரூ. 50 லட்சத்துக்கு மும்பை அணியும், மயங்க் மார்கண்டேவை ரூ. 30 லட்சத்துக்கு கொல்கத்தா அணியும் வாங்கின. அவர்களைத்தொடர்ந்து, குமார் கார்த்திகேயாவை ரூ. 30 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணியும், மனவ் சுதரை ரூ. 30 லட்சத்துக்கு குஜராத் அணியும் வாங்கின. பியூஸ் சாவ்லா மற்றும் கார்த்திக் தியாகியை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

சென்னை வேகப்பந்துவீச்சாளரைத் தூக்கிய ஐதராபாத்!

கடந்த சீசனில் சி.எஸ்.கே-வில் ஒரு சில ஆட்டங்களில் ஆடினாலும் கவனிக்க வைத்த வேகப்பந்துவீச்சாளர் சிமர்ஜித் சிங்கை ஏலத்தில் வாங்க சென்னை அணி முதல் ஆளாகக் கைதூக்கியது. இருப்பினும், ஐதராபாத் அணி அவரை ரூ. 1.50 கோடிக்கு வாங்கியது.

லக்னோ இளம் பந்துவீச்சாளருக்கு போட்டி போட்ட பஞ்சாப், குஜராத்!

லக்னோ அணிக்காக கடந்த இரு சீசன்களாக 24 விக்கெட்டுகள் வீழ்த்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் யஷ் தாகூரை குஜராத்துடன் போட்டிபோட்டு ரூ. 1.60 கோடிக்கு பஞ்சாப் வாங்கியது. அவரைத் தொடர்ந்து, கார்த்திக் தியாகியை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

பஞ்சாப்பில் பெங்களூரு இளம் வீரர்!

பெங்களூரு அணிக்காக கடந்த இரு சீசனில் 11 ஆட்டங்களில் 13 ஆட்டங்களில் வீழ்த்திய விஜய்குமார் வைசாக்கை, பஞ்சாப் அணி ரூ. 1.80 கோடிக்கு வாங்கியது. அவரைத்தொடர்ந்து, கடந்த மூன்று சீசன்களாக கொல்கத்தா அணிக்கு ஆடிவந்த வைபவ் அரோராவை கொல்கத்தா அணியே ரூ. 1.80 கோடிக்கு வாங்கியது.

மும்பை வேகப்பந்துவீச்சாளரை வாங்கிய ராஜஸ்தான்!

கடந்த இரு சீசன்களாக மும்பையில் 13 ஆட்டங்களில் சிறப்பாக பந்துவீசி 19 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆகாஷ் மத்வாலை, ராஜஸ்தான் அணி ரூ. 1.20 கோடிக்கு வாங்கியது. அவரைத் தொடர்ந்து, கம்பேக் மோடில் குஜராத் அணியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக பந்துவீசிய மோஹித் சர்மாவை ரூ. 2.20 கோடிக்கு டெல்லி வாங்கியது.

முன்னாள் மும்பை வீரரை வாங்கிய பஞ்சாப்!

2023-ல் மும்பை அணிக்காக விளையாடிய விஷ்ணு வினோத்தை பஞ்சாப் அணி ரூ. 95 லட்சத்துக்கு வாங்கியது. அவரைத் தொடர்ந்து, முன்னாள் டெல்லி ஸ்பின்னர் வீரர் ரஷீத் தர்-க்கு பெங்களூரு அணி ரூ. 2 கோடி வரை சென்றபோது, டெல்லி அணி தனது ஆர்.டி.எம் கார்டைப் பயன்படுத்தியது. பின்னர், இன்னொரு வாய்ப்பாக ரூ. 6 கோடியை நிர்ணயித்தது பெங்களூரு அணி. ஆனால், டெல்லி அணி அந்த தொகைக்கு ஆர்.டி.எம் கார்டைப் பயன்படுத்த விரும்பாததால் பெங்களூருக்கு சென்றார் ரஷீத் தர்.

சென்னையுடன் போட்டிபோட்டு 20 வயது இளம் விக்கெட் கீப்பரை வாங்கிய குஜராத்!

குமார் குஷாக்ரா எனும் 20 வயது இளம் விக்கெட் கீப்பருக்கு சென்னை முதல் ஆளாக கைதூக்கிய நிலையில், ரூ. 65 லட்சத்துக்கு குஜராத் வாங்கியது. அதையடுத்து, முன்னாள் பெங்களூரு வீரர் அனுஜ் ராவத்தை ரூ. 30 லட்சத்துக்கு குஜராத் வாங்கியது. இதற்கிடையில், ராபின் மின்ஸ் எனும் வீரரை மும்பை ரூ. 65 லட்சத்துக்கு வாங்கியது. மேலும், ஆர்யன் ஜூயாலை லக்னோ ஆரம்ப தொகை ரூ. 30 லட்சத்துக்கு வாங்கியது.

மஞ்சள் படையில் தமிழக வீரர்… CSK-வில் இணைந்த விஜய் சங்கர்!

குஜராத் அணியின் முன்னாள் வீரர் விஜய் சங்கரை சென்னை அணி ரூ. 1.20 கோடிக்கு சென்னை வாங்கியது. அவரைத்தொடர்ந்து, பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் மஹிபால் லொம்ரோரை ரூ. 1.70 கோடிக்கு குஜராத் வாங்கியது. அதையடுத்து, கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் மிடில் ஆர்டரில் இறங்கி ஒரு சில மேட்சுகளை ஜெயிக்க வைத்த அஷுதோஷ் சர்மாவை வாங்க நினைத்த பெங்களூரு அணி ரூ. 1.40 கோடியில் நிற்க, பஞ்சாப்புடன் போட்டிபோட்டு ரூ. 3.80 கோடிக்கு டெல்லி வாங்கியது.

RTM-ல் நமன் தீரை தூக்கிய மும்பை!

கடந்த சீசனில் மும்பை அணியில் ஆடிய நமன் தீரை ரூ. 3.40 கோடி வரை ராஜஸ்தான் கேட்டபோது மும்பை அணி ஆர்.டி.எம் கார்டை நீட்டியது. பின்னர், கடைசி முறையாக ரூ. 5.25 கோடி வரை ராஜஸ்தான் கேட்டபோது மும்பை அணி அதற்கு ஒப்புக்கொண்டு ரூ. 5.25 கோடிக்கு நமன் தீரை வாங்கியது. அவரைத் தொடர்ந்து, ஹைதராபாத் முன்னாள் வீரர் அப்துல் சமாத்தை ரூ. 4.20 கோடிக்கு லக்னோ வாங்கியது. மேலும், இதே லக்னோ ஹர்பிரீத் பிராரை வாங்க ரூ. 30 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடி வரை சென்றது. இறுதியில், பஞ்சாப் அணி ரூ. 1.50 கோடிக்கு அவரை வாங்கியது.

சென்னை குறிவைத்த குஜராத் வீரர்… குறுக்கே வந்த ஐதராபாத்!

கடந்த சீசனில் மிடில் ஆர்டரில் ஆடிய அபினவ் மனோகரை தொடக்கம் முதலே சென்னை அணி வாங்க முயர்சித்தது, இறுதியில் ஐதராபாத் அணி ரூ. 3.20 கோடிக்கு வாங்கியது. அவரைத்தொடர்ந்து, ஆல்ரவுண்டர் நிஸார் சிந்துவை குஜராத் அணி ரூ. 30 லட்சத்துக்கு எடுக்க, சென்னை இனியின் முன்னாள் வீரர் சமீர் ரிஸ்வியை ரூ. 95 லட்சத்துக்கு டெல்லி வாங்கியது.

முச்சத வீரரை வாங்கிய டெல்லி!

டெஸ்ட் போட்டிகளில் கடைசியாக இந்திய அணி சார்பில் முச்சதம் அடித்த கருண் நாயரை ரூ. 50 லட்சத்துக்கு டெல்லி வாங்கியது.

மும்பை வீரரை வாங்கிய பஞ்சாப்!

விதர்பா அணி வீரர் அதர்வா தாய்பேவை ஹைதராபாத் அணி ரூ. 30 லட்சத்துக்கு வாங்கியது. அவரைத்தொடர்ந்து, மும்பை அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நேஹல் வதேராவை வாங்க முதல் ஆளாக சென்னை ஆர்வம் காட்டியது. இறுதியில், பஞ்சாப் அவரை ரூ. 4.20 கோடிக்கு வாங்கியது. அதன்பின்னர், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு ஆடிய அங்ரிஷி ரகுவன்ஷிக்கு ரூ. 2.80 கோடி வரை சென்னை அணி சென்றது. இருப்பினும், கொல்கத்தா அணி அவரை ரூ. 3 கோடிக்கு வாங்கியது.

சென்னைக்கு மேலும் ஒரு ஸ்பின்னர்!

நூர் அஹமது

ஆப்கானிஸ்தான் ஸ்பின் பவுலர் நூர் அகமதுவின் பெயர் வந்ததும் மும்பையும், சென்னையும் களத்தில் இறங்கின. ஒருகட்டத்தில் சென்னை ரூ. 5 கோடி கை தூக்கியதும் மும்பை அப்படியே நின்றுவிட்டது. பின்னர், குஜராத் அணி தனது ஆர்.டி.எம் கார்டை பயன்படுத்தியது. அப்போது, சென்னை அணி ரூ. 10 கோடி என்று கூறியதும் குஜராத் அதிலிருந்து பின்வாங்க, நூர் அகமதுவை சென்னை அணியே வாங்கியது.

ஹஸரங்கா… மீண்டும் போட்டி போட்ட ராஜஸ்தான், மும்பை! 

இலங்கை ஸ்பின் பவுலர் வஹிந்து ஹஸரங்கா பெயர் வந்ததும் மும்பையும், ராஜஸ்தானும் போட்டிக்கு இறங்கின. இறுதியில் ரூ. 5.25 கோடிக்கு ராஜஸ்தான் அணியே வாங்கியது.

ஆர்ச்சர் கெடைக்கலான என்ன டிரென்ட் போல்ட்டை தூக்குறோம்!

ஆர்ச்சரை ஏலம் எடுக்க முயற்சித்து ராஜஸ்தானிடம் விட்ட மும்பை அணி, தங்களின் மற்றொரு முன்னாள் வீரர் டிரென்ட் போல்ட்டை ரூ. 12.50 கோடிக்கு ராஜஸ்தானிடம் போட்டி போட்டு வாங்கியது. அவரைத்தொடர்ந்து, சென்னை அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் மகீஷ் தீக்ஷனாவை ரூ. 4.40 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. மேலும், இந்திய ஸ்பின் பவுலர் ராகுல் சாஹரை ரூ. 3.20 கோடிக்கு ஹைதராபாத் அணி வாங்கியது. அதேபோல், ஆஸ்திரேலிய ஸ்பின் பவுலர் ஆடம் சாம்பாவை ரூ. 2.40 கோடிக்கு ஐதராபாத் வாங்கியது.

நடராஜனுக்காகப் போராடிய பெங்களூரு… ரூ. 10.75 கோடிக்கு தட்டிப் பறித்த டெல்லி!

நடராஜன்

தமிழக வேகப்பந்துவீச்சாளார் நடராஜனை ஏலத்தில் எடுக்கப் போராடிய பெங்களூரு அணி ரூ. 10.50 கோடியிலேயே நின்றுவிட்டதால், டெல்லி அணி அவரை ரூ. 10.75 கோடிக்கு வாங்கியது.

மீண்டும் ராஜஸ்தானில் ஆர்ச்சர்!

Archer

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பெயர் வந்ததும் எடுக்க முனைந்த மும்பை அணியால் ரூ. 12.25 கோடி வரை மட்டுமே கேட்க முடிந்ததால், ராஜஸ்தான் அணி வரை ரூ. 12.50 கோடிக்கு வாங்கியது. அவரைத் தொடர்ந்து, இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதுவை ரூ. 4.80 கோடிக்கு சென்னை அணி வாங்கியது.

கொல்கத்தாவில் ஆன்ரிச் நோர்க்கியா!

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்க்கியாவை லக்னோ அணியுடன் போட்டிபோட்டு, ரூ. 6.50 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது.

ஜோஷ் ஹேசில்வுட்டை வாங்கிய பெங்களூரு!

Josh Hazlewood

பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பெயர் வந்த்ததும் முதல் ஆளாக லக்னோ ரூ. 2 கோடிக்கு கைதூக்கியது. கொல்கத்தா, மும்பை ஆகிய அணிகளுடன் போட்டிபோட்டு ரூ. 12.50 கோடிக்கு பெங்களூரு அணி அவரை வாங்கியது. அவரைத்தொடர்ந்து, இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை ரூ. 9.50 கோடிக்கு குஜராத் வாங்கியது. மேலும், மற்றோரு இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கானை ராஜஸ்தானுடன் போட்டிபோட்டு ரூ. 9.75 கோடிக்கு லக்னோ வாங்கியது.

இஷான் கிஷனை கைவிட்ட மும்பை… ரூ. 11.25 கோடிக்கு எடுத்த ஐதராபாத்!

மும்பை அணிக்கு பல வருடங்களாக ஆடிவந்த இஷான் கிஷன், பெயர் வந்ததும் மும்பை அவரை வாங்க முயற்சித்தது. கடைசியில் ரூ. 11.25 கோடிக்கு ஐதராபாத் அவரை வாங்கியது. அவரைத்தொடர்ந்து, மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மாவுக்கு ரூ. 6.75 கோடி வரை கைதூக்கிய போதிலும், பெங்களூரு அணி ரூ. 7 கோடிக்கு அவரை கேட்டபோது, பஞ்சாப் அணி தனது ஆர்.டி.ம் கார்டை நீட்டியது. இன்னொரு வாய்ப்பாக பெங்களூரு ரூ. 11 கோடி சொன்னபோது பஞ்சாப் ஆர்.டி.எம் கார்டைப் பயன்படுத்தாததால் ரூ. 11 கோடிக்கு பெங்களூரு அவரை வாங்கியது.

கொல்கத்தாவில் புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்!

குயின்டன் டி காக்

கடந்த இரு சீசன்களாக லக்னோ அணியில் ஆடிவந்த முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக்கை கொல்கத்தா அணி ரூ. 3.60 கோடிக்கு வாங்கியது. அவரைத்தொடர்ந்து, மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிலிப் சால்ட்டை கொல்கத்தாவுடன் போட்டிபோட்டு ரூ. 11.50 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது. அவரைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரகமதுல்லா குர்பாஸை கொல்கத்தா அணி அவரின் ஆரம்ப விலை ரூ. 2 கோடிக்கே வாங்கியது.

மீண்டும் பஞ்சாப்பில் இணைந்த மேக்ஸ்வெல்!

கடந்த சீசனில் பெங்களூரு அணியில் சொதப்பிய மேக்ஸ்வெல்லை சென்னை அணி எடுக்க முயற்சித்த நிலையில், பஞ்சாப் அணி அவரை ரூ. 4.20 கோடிக்கு வாங்கியது.

ரூ. 23.75 கோடி… மாஸ் காட்டிய வெங்கடேஷ் ஐயர்!

கடந்த சீசனில் தங்களது அணியில் ஆடிய வெங்கடேஷ் ஐயரை, கொல்கத்தா பெங்களூருவுடன் போட்டிபோட்டு ரூ. 23.75 கோடிக்கு ஏலம் எடுத்திருக்கிறது. அவரைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸை பெங்களூருவுடன் போட்டிபோட்டு ரூ. 11 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. ஸ்டாய்னிஸைத் தொடர்ந்து மற்றொரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷை, லக்னோ அணி ஐதராபாத்துடன் போட்டிபோட்டு ரூ. 3.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.

சேப்பாக்கம் திரும்பும் அஸ்வின்… ரச்சின் ரவீந்திராவையும் வாங்கிய CSK!

ரச்சின் ரவீந்திரா

சென்னையின் முன்னாள் வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ. 3.20 கோடி வரை பஞ்சாப் அணி ஏலம் கேட்டபோது, சென்னை தனது RTM கார்டைப் பயன்படுத்தியது. அப்போது, மற்றொரு வாய்ப்பாக பஞ்சாப் அணி ரூ. 4 கோடிக்கு காய் தூக்கியபோது சென்னை அந்த விலைக்கே ரச்சின் ரவீந்திராவை ஏலம் எடுத்தது. அவரைத்தொடர்ந்து, அஸ்வின் பெயரைச் சொன்னதும் கைதூக்கிய சென்னை அணி, லக்னோ, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளுடன் போட்டிபோட்டு ரூ. 9.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஆஸ்திரேலிய அதிரடி வீரரை RTM-ல் வாங்கிய டெல்லி!

கடந்த சீசனில் டெல்லி அணியில் ஓப்பனிங்கில் அதிரடியாக ஆடிய ஜேக் ஃப்ரேஸர் மெக்கார்க்கை, டெல்லி அணி RTM கார்டு மூலம் ரூ. 9 கோடிக்கு வாங்கியது. அவரைத்தொடர்ந்து, ஹர்ஷல் படேலை ரூ. 6.75 கோடிக்கு கைதூக்கியபோட்து, பஞ்சாப் தனது RTM கார்டைப் பயன்படுத்தியது. அப்போது, இறுதிவரிப்பாக ஹைதராபாத் ரூ. 8 கோடி என்றபோது பஞ்சாப் அதற்கு ஆர்வம் காட்டாததால், ஹைதராபாத் அணியே ஹர்ஷல் படேலை வாங்கியது.

கான்வே கம்பேக்… ரூ. 6.25 கோடிக்கு எடுத்த சி.எஸ்.கே!

நியூசிலாந்து வீரர் டெவான் கான்வேயை பஞ்சாப் அணியுடன் போட்டிபோட்டு ரூ. 6.25 கோடி சென்னை அணி எடுத்தது. அவரைத் தொடர்ந்து ராகுல் திரிபாதியை ரூ. 3.40 கோடிக்கு சென்னை வாங்கியது. வார்னரை யாரும் ஏலம் எடுக்க முன்வராததால் unsold ஆனார்.

இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக்கைத் தூக்கிய டெல்லி!

இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக்கை எடுக்க சென்னை, பஞ்சாப் அணிகள் போட்டி போட்ட நிலையில், இறுதியில் டெல்லி அணி ரூ. 6.25 கோடிக்கு எலாம் எடுத்தது. எய்டன் மார்க்ராமை ஆரம்ப விலை ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுக்க எந்த அணிகளும் முன்வராத நிலையில், லக்னோ அணி அவரை ஆரம்பித்த தொகைக்கே எடுத்தது. தேவ்தத் படிக்கல்லை யாரும் ஏலம் எடுக்கவில்லை.

`அடுத்தமுறைப் பார்க்கலாம்’ – பட்லர், சஹாலை வழியனுப்பி வைத்த ராஜஸ்தான்!

கே.எல். ராகுலை ரூ. 14 கோடிக்கு எடுத்த டெல்லி!

கே.எல்.ராகுல்

முன்னாள் லக்னோ வீரர் கே.எல். ராகுல் பெயர் சொன்னதும் பெங்களூரு, கொல்கத்தா ரூ. 10.75 அணிகள் போட்டிபோட்டன. பின்னர் டெல்லியும், சென்னையும் ஏலத்தை ஏற்றி போட்டி போட, இறுதியில் ரூ. 14 கோடிக்கு டெல்லி அணி கே.எல். ராகுலை வாங்கியது.

அதிரடி வீரர் லிவிங்ஸ்டனை ரூ. 8.75 கோடிக்கு எடுத்த பெங்களூரு!

முன்னாள் பஞ்சாப் வீரர் லிவிங்ஸ்டனை எடுக்க தொடக்கம் முதலே ஆர்வம் காட்டிய பெங்களூரு அணி, ஹைதராபாத், டெல்லி, சென்னை ஆகிய அணிகளுடன் போட்டிபோட்டு ரூ. 8.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

DSP சிராஜ்… ரூ. 12.25 கோடிக்கு தூக்கிய குஜராத்!

முன்னாள் பெங்களூரு வீரர் முகமது சிராஜை குஜராத் அணி ரூ. 12.25 கோடிக்கு ஏலம் எடுத்திருக்கிறது.

சஹால் ரூ. 18 கோடிக்கு, ஷமி ரூ. 10 கோடி, மில்லர் ரூ. 7.5 கோடி!

யுஷ்வேந்திர சஹாலை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் அணியும், முகமது ஷமியை ரூ. 10 கோடிக்கு ஹைதராபாத் அணியும், மில்லரை ரூ. 7.5 கோடிக்கு லக்னோ அணியும் ஏலம் எடுத்திருக்கின்றன.

மிட்செல் ஸ்டார்க்கை ரூ. 11.75 கோடிக்கு எடுத்த டெல்லி!

கடந்த சீசனில் ரூ. 24.75 கோடிக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்கை, இந்த முறை ரூ. 11.75 கோடிக்கு டெல்லி ஏலம் எடுத்திருக்கிறது.

ரூ. 15.75 கோடிக்கு ஜாஸ் பட்லரைத் தூக்கிய குஜராத்!

கடந்த சில சீசன்களில் ராஜஸ்தான் அணியில் அதிரடியாக ஆடி வந்த ஜாஸ் பட்லரை, லக்னோ அணியுடன் போட்டி போட்டு ரூ. 15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்திருக்கிறது.

IPL Mega Auction Live: ஐ.பி.எல் சரித்திரம்… ரூ. 26.75 கோடிக்கு ஷ்ரேயாஸை மாஸாக எடுத்த பஞ்சாப்!

கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயஸ் ஐயர் பெயர் வாசிக்கப்பட்டதும் முல் அணியாக ரூ. 2 கோடிக்கு கொல்கத்தா அணி கை தூக்கியது. அதைத்தொடர்ந்து, டெல்லி அணிகள் வரை ரூ. 26.50 போட்டிபோட்ட நிலையில் பஞ்சாப் ரூ. 26.75 கோடிக்கு தட்டித் தூக்கியது. ஐ.பி.எல் வரலாற்றில் ஷ்ரேயஸ் ஐயர் தான் தற்போது அதிக விலைக்கு ஏலம் போன வீரர்.

ரபாடாவை ரூ. 10.75 கோடிக்கு எடுத்த குஜராத்!

ரபாடா

முன்னாள் பஞ்சாப் வீரர் காகிஸோ ரபாடாவை, பெங்களூரு, மும்பை அணிகளுடன் போட்டி போட்டு ரூ. 10.75 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்திருக்கிறது.

அர்ஷ்தீப் சிங்குக்கு அடித்த ஜாக்பாட்… தட்டித் தூக்கிய குஜராத் டைட்டன்ஸ்!

அர்ஷ்தீப் சிங்

முதல் வீரராக அர்ஷ்தீப் சிங் ரூ. 2 கோடிக்கு பெயரை அறிவித்ததும் சி.எஸ்.கே அணி ஆரம்ப தொகைக்கே கை தூக்கியது. டெல்லி, குஜராத், பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளுடன் ஐதராபாத் போட்டி போட்டு ரூ. 15.75 கோடிக்கு கை தூக்கியதும், அந்த விலைக்கே பஞ்சாப் அணி ஆர்.டி.எம் பயன்படுத்தியது.

புதிய விதிமுறைப்படி ஆர்.டி.எம் கேட்ட பிறகு இன்னொரு வாய்ப்பை பயன்படுத்தி ரூ. 18 கோடிக்கு ஐதராபாத் கேட்டது. இறுதியில், பஞ்சாப் அணி ரூ. 18 கோடிக்கு அர்ஷ்தீப் சிங்கை ஏலம் எடுத்தது.

ஐ.பி.எல் மெகா ஏலம் தொடங்கியது!

IPL Auction

சவுதி அரேபியாவில் இரண்டு நாள்கள் நடைபெறும் ஐ.பி.எல் மெகா ஏலம் இந்திய நேரப்படிஇன்று பிற்பகல் 3:30 மணியளவில் தொடங்கியது. 577 வீரர்களில் தங்களுக்கான வீரர்களைப் போட்டி போட்டு ஏலத்தில் எடுக்க 10 அணிகளும் தயார் நிலையில் இருக்கின்றன.

ஐ.பி.எல் 18-வது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.

ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்முறை மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் செளதி அரேபியாவின் ஜெட்டாவில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இந்த ஏலம் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,574 வீரர்கள் இந்த ஏல பட்டியலில் உள்ளனர்.

அதில் 1165 பேர் இந்தியர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள். இந்த ஆண்டு ஏலத்தில் கூடுதல் சிறப்பாக பல இந்திய நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், இஷான் கிஷன் என்று இந்திய அணிக்காக ஆடி வரும் பிராண்ட் வேல்யூ கொண்ட வீரர்களும் ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.

10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானது. மெகா ஏலத்தில் எந்த வீரர் எந்த அணியால் வாங்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல், ஜியோ சினிமா ஓ.டி.டி தளங்கள் முதலியவற்றில் ஐ.பி.எலின் இந்த மெகா ஏலத்தை நேரலையில் பார்க்கலாம்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.