ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே செய்த மிகப்பெரிய தவறு? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு துவங்கியது. இந்த ஆண்டு நடைபெற்ற மெகா நேரத்தில் இந்திய அணியில் உள்ள முக்கிய நட்சத்திரங்கள் இடம் பெற்று இருந்தனர். இதனால் எந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்ல உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் எந்த மாதிரியான வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுக்க உள்ளது என்று கூர்ந்து கவனித்து வந்தனர். டெல்லி அணியில் இருந்து ரிஷப் பந்த வெளியேறியதால் எப்படியாவது சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் என்று நம்பி இருந்தனர். ஆனால் சிஎஸ்கே அவருக்கு ஒருமுறை கூட ஏலம் கேட்கவில்லை, மாறாக லக்னோ அணி பந்தை 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

10 கோடிக்கு ஏலம் போன நூர் அகமது!

ஏலம் தொடங்கிய சில மணி நேரங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அமைதியாக இருந்தது. அதன் பிறகு தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. டெவோன் கான்வே, ராகுல் திருப்பதி, ரச்சின் ரவீந்தரா, அஸ்வின்,  நூர் அகமது, கலீல் அகமது என தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் தட்டி தூக்கியது. குறிப்பாக டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, அஸ்வின் போன்றவர்களை மீண்டும் அணியின் எடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் அனைவரையும் ஆச்சரியமளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமதுவை ரூ. 10 கோடிக்கு ஏலத்தில் கைப்பற்றியது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்தது. 

ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான நூர் அகமது ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். சென்னை மற்றும் குஜராத் இடையே இவருக்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் சென்னை 5 கோடிக்கு ஏலத்தில் எடுக்க முயன்றது. அப்போது குஜராத் டைட்டன்ஸ் தங்கள் ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்) கார்டை எடுத்தது. இருப்பினும் எப்படியாவது இவரை அணியில் எடுக்க வேண்டும் என்று நூர் அகமது விலையை ஒரே அடியாக ரூ. 10 கோடிக்கு உயர்த்தியது. சிஎஸ்கேவின் இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத குஜராத் நூர் அகமதை வேண்டாம் என்று முடிவு செய்தனர். சந்திரமாக அவரை சென்னை அணி ஏலத்தில் எடுத்தாலும் இவருக்கு 10 கோடி கொடுக்க வேண்டுமா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர் மற்றும் முகமது ஷமி போன்ற முக்கிய வீரர்கள் ஏலத்தில் வந்த போதிலும் சென்னை அணி நிதானமாக தங்களுக்கு வேண்டிய வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகிறது. பேட்டிங் ஓர் அளவிற்கு செட் ஆகி உள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஹிட்டர்களை குறிவைத்து 2ம் நாள் ஏலத்தில் களமிறங்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதல் நாள் ஏலத்தின் முடிவில் சென்னை அணி:

ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பத்திரனா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ஆர். அஷ்வின், கலீல் அகமது, நூர் அகமது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.