குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க ஜாமீன் வழங்க வேண்​டும்: சிறையில் உள்ள ரஷீத் எம்.பி. நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: காஷ்மீரின் பிரி​வினைவாத அரசி​யல்​வாதி ஷேக் அப்துல் ரஷீத் (இன்​ஜினியர் ரஷீத்). தீவிர​வா​தி​களுக்கு நிதி உதவி செய்த புகாரின் கீழ் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்​யப்​பட்​டார். மக்களவை தேர்​தலில் காஷ்மீரின் பாரமுல்லா தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். இந்நிலை​யில், “நாடாளு​மன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க ஜாமீன் வழங்க வேண்​டும்” என டெல்லி முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதி​மன்​றத்​தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதைப் பரிசீலிக்க தேசிய புலனாய்வு ​முகமைக்கு (என்ஐஏ) நீதிமன்றம் உத்​தர​விட்​டது​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.