1 லட்சம் கூடுகள் தயாரிக்க இலக்கு: பிரதமர் மோடியின் பாராட்டால் நெகிழும் சென்னை ‘சிட்டுக்குருவி’ தம்பதி!

புதுடெல்லி/ சென்னை: சிட்டுக்​குருவிகளை பாது​காக்​கும் நோக்​கில் கூடுகள் தயாரித்து, மக்களுக்கு வழங்கி வரும் சென்னையை சேர்ந்த ‘கூடு​கள்’ அறக்​கட்​டளைக்கு ‘மனதின் குரல்’ நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பாராட்டு தெரி​வித்​தார்.

பிரதமர் நரேந்திர மோடி​யின் 116-வது ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில், சிட்டுக்​குருவி குறித்து அவர் பேசி​ய​தாவது: அனைத்து மொழிகள், கலாச்​சா​ரத்​தி​லும் சிட்டுக்​குருவி பற்றிய சம்பவங்​கள், கதைகள் உள்ளன. நகரங்​களில் தற்போது மிக அரிதாகவே சிட்டுக்​குருவிகாணப்​படு​கிறது. இந்த பறவையை மீண்​டும் மீட்​டெடுக்க சில வித்​தி​யாசமான முயற்சிகள் மேற்​கொள்​ளப்​படு​கின்றன.

குறிப்​பாக, சென்னையை சேர்ந்த ‘கூடுகள் ’அறக்​கட்​டளை, சிட்டுக்​குரு​வி​யின் எண்ணிக்கையை பெருக்க, பள்ளி குழந்தை​களை தங்கள் இயக்​கத்​தில் சேர்த்​துள்ளது. சிட்டுக்​குரு​வி​யின்கூட்டை எவ்வாறு கட்டுவது என்பது குறித்து குழந்தை​களுக்கு பயிற்சி அளிக்​கின்​றனர். கடந்த 4 ஆண்டு​களில் சிட்டுக்​குருவி​களுக்காக 10 ஆயிரம் கூடுகளை இந்த அமைப்பு உருவாக்கி​யுள்​ளது. இதுபோன்ற முயற்சி​களில் ஈடுபட்​டால், சிட்டுக்குருவி கட்டாயம் மீண்​டும் நமது வாழ்க்கை​யின் அங்கமாக ஆகிவிடும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

10 ஆயிரம் கூடுகள் தயாரிப்பு: சென்னை போன்ற நகரப் ​பகு​தி​களில் சிட்டுக்​குருவிகளை மீண்​டும் கொண்டு வந்து, அவற்றின் பெருக்​கத்தை அதிகரிக்​கும் நோக்​கில் வடசென்னையை சேர்ந்த கணேசன் – சாந்​தினி தம்ப​தியர் 2014-ம் ஆண்டு ‘கூடு​கள்’ என்ற அறக்​கட்​டளையை தொடங்கி நடத்தி வருகின்​றனர். பிரதமர் மோடி பாராட்டு தெரி​வித்​துள்ள நிலை​யில், தங்களது பணி குறித்து, அறக்​கட்​டளை​யின் இணை நிறு​வனர் சாந்​தினி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறிய​தாவது: சிட்டுக்​குருவி இனத்தை பெருக்க வேண்​டும் என்ற நோக்​கில் ‘கூடு​கள்’ அறக்​கட்​டளையை தொடங்​கினோம். இதை அடுத்த கட்டத்​துக்கு கொண்டு செல்​வதற்​காக, பள்ளி குழந்தைகளை ஈடுபடுத்தி உள்ளோம். அந்த வகையில், பள்ளி குழந்தை​களுக்கு கூடு செய்ய கற்றுக்கொடுத்து, அவர்கள் மூலமாக, இதுவரை 10 ஆயிரம் சிட்டுக்​குருவி கூடுகள் தயாரித்​துள்ளோம். இதை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்.

சிட்டுக்குருவிகள் அதிகரிப்பு: வடசென்னை​யில் பல்வேறு பகுதி​களுக்​கும் சென்று நாங்களே இவற்றை பொருத்தி, சிட்டுக்​குரு​வி​யின் செயல்​பாடுகளை கண் காணித்து வருகிறோம். இதனால், வடசென்னை பகுதி​யில் சிட்டுக்​குருவி​களின் எண்ணிக்கை அதிகரித்​துள்ளது. சென்னை​யில் பல்வேறு பள்ளி​களும் இதில் ஆர்வம் காட்டு​கின்றன. தங்களது மாணவர்​களுக்​கும் சிட்டுக்​குருவி கூடு கற்றுத்​தரு​மாறு எங்களுக்கு அழைப்பு விடுக்​கின்​றனர். தமிழகம் மட்டுமின்றி, புதுச்​சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்​களுக்​கும் இந்த கூடுகளை வழங்கி வருகிறோம்.

1 லட்சம் கூடு தயாரிக்க இலக்கு: ஒரு லட்சம் கூடுகளை தயாரித்து, சிட்டுக்​குருவி இனத்தை மேலும் பெருக்குவதுதான் எங்கள் அடுத்த இலக்கு. அதற்​கேற்ப, பள்ளி மாணவர்கள் மூலம் மக்களுக்கு விழிப்பு​ணர்​வும் ஏற்படுத்தி வருகிறோம். இந்த சூழலில், மன​தின்குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் எங்களை குறிப்​பிட்டு பாராட்​டி​யிருப்பது மகிழ்ச்​சியாக உள்​ளது. எங்​களது பணிக்கு அங்​கீகாரம் தரு​வ​தாக​வும் அமைந்​துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் இயங்கும் குழந்தைகள் நூலகத்துக்கும் பாராட்டு: சென்னை ஆலப்பாக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ‘பிரக்ருத் அறிவகம்’ என்ற நூலகம். பொறியாளரான ஸ்ரீராம் (42) இதை நடத்தி வருகிறார். இவர், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ஆரக்கிள் போன்ற முன்னணி நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். சிறு வயதிலேயே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக, குழந்தைகளுக்கான நூலகமாக இதை தொடங்கினார். பின்னர், ரோபோட்டிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் வகுப்புகள் என கற்றல் மையமாக மாறி, குழந்தைகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்றைய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் இதையும் குறிப்பிட்டு பிரதமர் மோடி பாராட்டினார்.

பிரதமர் கூறும்போது, “சென்னையில் உள்ள ‘பிரக்ருத் அறிவகம்’ எனும் சிறார் நூலகம், குழந்தைகளுக்கான படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மைய களமாக உள்ளது. இந்த நூலகத்தை ஸ்ரீராம் கோபாலன் என்பவர் நடத்தி வருகிறார். இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. அத்துடன், இந்த நூலகத்தில் நடத்தப்படும் கதை சொல்லும் அமர்வு, கலை பட்டறை, நினைவாற்றல் பயிற்சி வகுப்பு, ரோபோட்டிக்ஸ் போன்ற பலவிதமான செயல்பாடுகளும் குழந்தைகளை ஈர்க்கின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் பிடித்தமான ஏதோ ஒன்று இங்கு இருப்பது இதன் சிறப்பு ஆகும்” என்று கூறி பாராட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.