இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 மெகா ஏலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாவது நாள் ஏலம் இன்று திங்கட்கிழமை ஜெட்டாவில் உள்ள அபாடி அல் ஜோஹர் அரங்கில் நடைபெறவுள்ளது. நேற்று நடந்து முடிந்த முதல் நாள் ஏலத்தில் மொத்தம் 72 வீரர்கள் 467.95 கோடிக்கு உரிமையாளர்கள் வாங்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாள் ஏலத்தில் மயங்க் அகர்வால் தொடங்கி, பாப் டூ பிளசிஸ், புவனேஸ்வர்குமார் என பல முக்கிய வீரர்கள் வர உள்ளனர். இருப்பினும் 10 அணிகளிடமும் பர்ஸ் தொகை கம்மியாக இருப்பதால் எப்படி வீரர்களை எடுக்க உள்ளனர் என்பதில் சுவாஸ்யமாக இருக்கும்.
அதிக விலைக்கு ஏலம் போன பந்த், ஐயர்
ஜித்தாவில் நடந்த முதல் நாள் மெகா ஏலத்திள் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பந்தை எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த வீரராக ரிஷப் பண்ட் மாறி உள்ளார். இதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஷ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் எடுத்து இருந்தது. லக்னோ மற்றும் பஞ்சாப் என இரண்டு அணிகளுக்கும் இந்த சீசனில் புதிய கேப்டன்கள் தேவைப்பட்டனர். எனவே அவர்கள் முறையை பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் அதிக விலைக்கு எடுத்துள்ளனர். ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24.75 கோடி ஏலத்தில் எடுத்து இருந்தது. அது தான் அதிக விலையாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் அதனை உடைத்துள்ளன.
Iyer and Pant after auction pic.twitter.com/z3KiZIidgL
— Darshannn (@D4Dramatic) November 24, 2024
2ம் நாள் ஏலத்தில் வரவுள்ள முக்கிய வீரர்கள்
மயங்க் அகர்வால், ஃபாஃப்டு பிளெஸ்ஸிஸ், க்ளென் பிலிப்ஸ், ரோவ்மேன் பவல், அஜிங்க்யா ரஹானே, பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், சாம் கர்ரான், மார்கோ ஜான்சன், டேரில் மிட்செல், க்ருனால் பாண்டியா, நிதிஷ் ராணா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், கே.எஸ் பாரத், அலெக்ஸ் கேரி, ஷாய் ஹோப், ஜோஷ் இங்கிலீஸ், ரியான், தீபக் சஹார், ஜெரலி கோட்ஸி, ஆகாஷ் தீப், துஷார் தேஷ்பாண்டே, லாக்கி பெர்குசன், புவனேஷ்வர் குமார், முகேஷ் குமார், அல்லா கசன்பர், அகேல் ஹொசைன், கேசவ் மகராஜ், முஜீப் உர் ரஹ்மான், அடில் ரஷீத், விஜயகாந்த் வியாஸ்காந்த்
ஒவ்வொரு அணியிடமும் மீதமுள்ள பர்ஸ் தொகை
மும்பை இந்தியன்ஸ் 26.10 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.05 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் 15.60 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 30.65 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5.15 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 14.85 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் 17.35 கோடி
பஞ்சாப் கிங்ஸ் 22.50 கோடி
குஜராத் டைட்டன்ஸ் 17.50 கோடி
டெல்லி கேபிடல்ஸ் 13.80 கோடி