Reliance Jio AirFiber… சிறப்பு சலுகையுடன்… குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய சேவை…

ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஜூலை மாதத்தில், கட்டணங்களை உயர்த்தினாலும், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான மலிவான பல திட்டங்கள் உள்ளன என்பதையும் மறுக்க இயலாது. 45 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஜியோ நிறுவனம், மொபைல் போன்களுக்கான 4G மற்றும் 5G ரீசார்ஜ் திட்டங்களைத் தவிர, வைஃபை இணைப்புகளுக்கான சிறந்த திட்டங்களை வழங்குகிறது.

ஜியோவின் ஏர் பைபர்

வயர்லெஸ் இணைய சேவையான ஏர் ஃபைபர் (AirFiber) போன்ற சேவைகளிலும் பல மலிவான திட்டங்கள் உள்ளன. அதோடு, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க அடிக்கடி புதிய சலுகைகளை வழங்குகிறது. தற்போது இந்தியாவில்வேகமாக வளர்ந்து வரக்கூடிய பிராட்பேண்ட் சேவையாக ஜியோவின் ஏர் பைபர் உள்ளது. கிட்டத்தட்ட 1.2 கோடி இணைப்புகளுடன் ரிலையன்ஸ் ஜியோ பைபர் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் தங்களுடைய ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு சலுகையை அறிவித்துள்ளது.

இன்ஸ்டாலேஷன் கட்டணத்திற்கு விலக்கு

சமீபத்தில், ஜியோவின் 5ஜி நெட்வொர்க்கை ஏற்கனவே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இவர்கள், ₹1111 கட்டணத்தில் AirFibre இணைப்பைப் பெற முடியும். இது 50 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டம். ஒரு மாதத்திற்கும் மேலான வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த சலுகையில் இன்ஸ்டாலேஷன் கட்டணமாக ₹ 1000 கூட ஜியோ வசூலிக்கவில்லை. இதனால் புதிதாக பிராட்பேண்ட் சேவை பெறுபவர்கள் 1000 ரூபாயை மிச்சப்படுத்தலாம்.

முன்னதாக, நீங்கள் ஜியோ ஏர்ஃபைபரின் 3, 6 அல்லது 12 மாத திட்டத்தை எடுத்திருந்தால், இன்ஸ்டாலேஷனுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவித்திருந்தது. ஆனால் இப்போது ஜியோ தனது சலுகையை மேலும் மேம்படுத்தியுள்ளது. இப்போது நீங்கள் 50 நாட்களுக்கான திட்டத்தை எடுத்தாலும், இன்ஸ்டாலேஷனுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. ஜியோவின் AirFibre சேவை நாட்டின் பல பகுதிகளில் கிடைக்கிறது. மேலும் இந்தியாவில் பெரும்பாலானோர், இந்த வகை வயர்லெஸ் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். நாடு முழுவதும் புதிதாக சுமார் ஒரு லட்சம் வீடுகளை விரைவில் AirFibre மூலம் இணைக்க ஜியோ இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிவேக இணைய சேவை

ஜியோ ஏர்ஃபைபரின் சில திட்டங்களில், பல OTT ஆப்ஸின் இலவச சந்தாவும் கிடைக்கும். இதனுடன், இந்த திட்டங்களில் இணைய வேகமும் மிக சிறப்பாக உள்ளது. இந்தத் திட்டங்களில் 1 Gbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

ஜியோ பைபர் சேவை பெறுவதற்கான விண்ணப்பம்

ஜியோ இணையதளத்திற்கு சென்று ஜியோ பைபர் சேவை பெறுவதற்கான விண்ணப்பம் செய்யலாம் அல்லது 60008-60008 இந்த தொலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் வழங்கலாம். ஜியோ நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தன்னுடைய வயர்லெஸ் ஏர் பைபர் சேவையை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.