பொள்ளாச்சி: வைரலான தேங்காய் வடிவ இருக்கை; தேங்காய் வியாபாரி வீட்டுத் திருமணமா? பின்னணி என்ன?

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ‘தென்னை நகரம்’ என்றழைக்கப்படுகிறது. தேங்காய் சாகுபடியில் இந்தியளவில் பொள்ளாச்சிதான் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி தென்னை மரங்களில் 3.5 கோடிக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பொள்ளாச்சி சுற்றுவட்டாரங்களில்தான் இருக்கின்றன.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி இளநீர் வர்த்தகமும் சர்வதேசளவு பிரபலமானது. உலகளவில் பல நாடுகளுக்கு இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. ‘பொள்ளாச்சி தேங்காய் வியாபாரி வீட்டுத் திருமணம்’ என்ற தலைப்பில், ஒரு திருமண நிகழ்ச்சியில் விருந்தினர்களுக்குத் தேங்காய் வடிவில் அமைக்கப்பட்ட இருக்கையில் உணவு பரிமாறப்பட்டது.

பொள்ளாச்சி தேங்காய் வடிவில் இருக்கை

தேங்காய் வியாபாரி என்பதால், தேங்காய் வடிவில் இருக்கை அமைக்கப்பட்டதாகத்தான் தகவல் வெளியானது. இந்த சம்பவம் குறித்து விசாரித்தோம். அதில் அந்தத் திருமணம் நடைபெற்றது உண்மை தான்.

இருப்பினும், இது தேங்காய் வியாபாரி வீட்டுத் திருமண நிகழ்வு இல்லை. தங்க நகை வியாபாரியின் இல்ல திருமண விழாவில் தான், தென்னை நகரத்தின் பிரபலத்தைப் பறைசாற்றும் வகையில் தென்னை வடிவிலான இருக்கை அமைத்துள்ளனர்.

பொள்ளாச்சி தேங்காய் வடிவில் இருக்கை

இருப்பினும் இதை வெளி உலகுக்கு விளம்பரப்படுத்த அவர்களுக்கு விருப்பம் இல்லையாம். திருமண நிகழ்வுக்கு வந்தவர்கள் எடுத்த வீடியோ வைரலாகி வெளி உலகுக்குத் தெரிந்துவிட்டதாம்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.