நேற்றிரவு முதல் மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹெட ஓயா ஆற்றுப்படுக்கையை அண்மித்த மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ மற்றும் அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலகப் பிரிவுகளில் தாழ்வான பகுதிகள் தற்போது முதல் அடுத்த 48 மணிநேரம் வரை. வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையங்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.