2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்குப் புதிய அரசு எதிர்பார்த்துள்ளது. இதற்கான அனுமதி நேற்று (25.11.2024) நடைபெற்ற அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுகின்ற வகையில் அபிவிருத்தியின் ஆரம்பப் படிமுறைகளை மேற்கொள்வதற்கான வரவு செலவுத் திட்டமாக 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள செலவீன மட்டுப்பாடுகளுக்கிணங்க, அரச கொள்கை வரைபுக்கமைய, அமைச்சின் விடயதானங்களின் கீழ் அந்தந்த அமைச்சுக்களால் அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியொதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் அனைத்து அமைச்சுக்களிலிருந்தும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்ள தீர்மானிக்ப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025.01.09 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாம் வாசிப்பு (வரவு செலவுத்திட்ட விவாதம்) 2025.02.17 அன்று நடாத்துவதற்கும், மூன்றாம் வாசிப்புக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தை 2025.02.27 அன்று தொடக்கம் 2025.03.21 அன்று வரை நடாத்துவதற்கு இயலுமாகும் வகையில் 2025 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையினால் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.