எப்போதும் அவதானத்துடன் செயல்பட வேண்டும்

இந்த அனர்த்த இரண்டு நாட்கள் தொடர்பாக மிகவும் அவதானமாக செயல்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கோரிக்கை!

இந்த நாட்களில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மலைப் பாங்கான பிரதேசங்களில் பயணம் செய்யும் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்களை மிகவும் அவதான ஜிமாக செல்லுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலைப்பிரதேசங்களில் பயணிக்கும் போது வாகனங்களை வீதியின் ஓரத்திற்கு அவசியமின்றி எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், வாகனத்தை செலுத்தும் போது எதிர்ப்புறத்தில் மற்றுமொரு கனரக வாகனம் அல்லது பஸ் வண்டி வரும்போது அதற்கு பொருத்தமான அளவு இடத்தை எடுத்தால எடுத்துக்கொண்டு அவசியமான இடத்தை ஒதுக்கி கொடுக்குமாறும்,
மேலும் பஸ் வண்டிகள் மிகவும் அவதானமாகவும் போதிய இடம் உள்ள வீதியில் மாத்திரமே பஸ் வண்டிகளை செலுத்துமாறும், எப்போதும் அவதானம் இன்றி வாகனத்தை செலுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய காலநிலையில் வாகனங்கள் செயற்பட வேண்டிய முறை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ் மா அதிபர் இவ்வாறு தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்; பஸ்கள் அவதானமின்றி செல்லும்போது தடம்புரண்டு, வீதியை விட்டு விலகி பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம்.

அதனால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. எனவே பஸ் வண்டிகளின் சாரதிகளுக்கு மிகவும் பாரிய பொறுப்பு உள்ளது. இக்காலப் பகுதியில் வழமையை விடவும் அதிகமாக கவனத்துடன் தமது பஸ்ஸை செலுத்துவதில் எப்போதும் அவதானத்துடன் செயல்பட வேண்டும்.

பலத்த காற்று வீசும் போது வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுகிறது. எனவே அது குறித்தும் மக்கள் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறான வீடுகள் காணப்படும் அவற்றின் பாதுகாப்பு தொடர்பாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அத்துடன் அவற்றை சரி செய்வதற்கான அல்லது பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எந்த நேரத்திலும் அவசியமாயின் 117,118,119 என அவசர தொலைபேசி இலக்கங்கள் காணப்படுகின்றன.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் அறிவித்தல் களில் அடிக்கடி கவனம் செலுத்திக் கொள்ளுங்கள். அதனால் சொத்துக்கள் உடமைகள் உயிர் சேதங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என்றும், அதற்காக இந்த இரண்டு நாட்களும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ கோரிக்கை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.