ஏர்டெல் 90 நாள் ரீசார்ஜ் திட்டம்… 135ஜிபி டேட்டா உடன் OTT பலன்கள்

ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, அவ்வப்போது மலிவான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனமும் மலிவான சில திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. 

ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஜூலை மாதத்தில் கட்டணங்களை அதிகரித்தன. இதனை அடுத்து, பயனர்கள் பலர் தங்கள் இரண்டாம் நிலை சிம்மை பயன்படுத்தாமல், நிறுத்தியதன் காரணமாக, தனியார் நிறுவனங்களின் பயனர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் குறைந்தது. அதிகபட்சமாக 80 லட்சம் பயனர்களை ஜியோ இழந்துள்ளது என தரவுகள் கூறுகின்றன.

எனவே, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள, தனியார் நிறுவனங்கள் சலுகைகளுடன் கூடிய சில திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வருகின்றன. இந்நிலையில், ஏர்டெல் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் ரீசார்ஜ் திட்டத்தை (Airtel Prepaid Plans) அறிவித்துள்ளது. இதில் பயனர்கள் வரம்பற்ற அழைப்பு, தினம் 1.5 ஜிபி டேட்டா உடன் ஓடிடி சந்தா உள்ளிட்ட  நன்மைகளைப் பெறுகின்றனர்.

ஏர்டெல்லின் 90 நாள் திட்டம்

ஏர்டெல்லின் இந்த ரீசார்ஜ் திட்டத்திற்கான கட்டணம் ரூ.929. இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பேசுகையில், பயனர்களுக்கு 90 நாட்கள் வேலிட்டியுடன், நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் இலவச தேசிய அளவிலான ரோமிங்கின் பலனைப் பெறுவார்கள். நிறுவனம் இதன் மூலம் பயனர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலியின் இலவச சந்தாவையும் வழங்குகிறது. இதில் அவர்கள் SonyLIV, Lionsgate Play, Eros Now போன்ற OTT சேனல்களுக்கான அணுகலைப் பெறுவார்கள்.

மொத்தம் 135ஜிபி டேட்டா

ஏடெல்லின் இந்த 90 நாள் திட்டத்தில், பயனர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டாவின் பலனைப் பெறுகிறார்கள். இதன் மூலம் மொத்தம் 135ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, பயனர்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஏர்டெல் விங்க் இலவச ஹலோ ட்யூன்களின் நன்மையும் வழங்கப்படும். தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் வரம்பு நிறைவடைந்ததும், அதற்கும் மேலான அனுப்பப்படும் எஸ்எம்எஸ் சேவைக்கு பயனர்களிடம் இருந்து ஒவ்வொரு உள்ளூர் செய்திக்கும் ரூ 1 மற்றும் ஒவ்வொரு எஸ்டிடி செய்திக்கும் ரூ 1.5 என்ற அளவில் வசூலிக்கப்படும்.

ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் திட்டங்கள்

ஜியோ தனது பயனர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்திற்கு கட்டணமாக ரூ.899 வசூலிக்கிறது. இருப்பினும், ஜியோவின் இந்த திட்டத்தில், பயனர்கள் OTT செயலிகளுக்கான இலவச அணுகல் கிடைக்காது. இதில், பயனர்கள் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பின் பலனைப் பெறுவார்கள். இது தவிர, 20ஜிபி கூடுதல் டேட்டாவின் பலனையும் பெறுவார்கள். இது தவிர, இலவச தேசிய ரோமிங், தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற பலன்களும் கிடைக்கும். அதே நேரத்தில், பிஎஸ்என்எல் நிறுவனம் 90 நாட்களுக்கான திட்டம் ஏதும் வழங்கவில்லை.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பயனர்களுக்கு பல சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. இலவச OTT சேனல் அணுகலையும் விரும்பும் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்களுக்கும், ஏர்டெல் பல சிறந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.