சீரற்ற காலநிலை காரணமாக யாழ் ஏ 09 வீதியின் வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் ஏ 09 வீதியின் வாகன போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது ஓமந்தை பொலிஸ் பிரிவு.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைக் காரணமாக ஓமந்தை பொலிஸ் பிரிவிட்குற்பட்ட நொச்சிமோட்டை பாலம் மற்றும் அதன் அண்டிய பிரதேசங்கள் வெள்ளத்தால் முற்றாக மூழ்கியுள்ளது.

இவ் வீதியினூடாக இலகு ரக வாகனங்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அத்தோடு கனாக வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகையால் ஓமந்தை பொலிஸ் பிரிவின் ஊடாக 09 வீதியை பயன்படுத்தும் பொது மக்களும், சாரதிகளும் அனர்த்த நிலைமைகள் குறையும் வரை பின்வரும் மாற்று வீதிகளை பயன்படுத்த முடியும்.

மாற்று வீதிகள்

வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் நோக்கியும் யாழ்ப்பாணம் ஊடாக வவுனியா நோக்கியும் பயணிக்கும் இலகு ரக வாகனங்கள் மன்னார் ஏ- 32 வீதியின் வவுனியா, செட்டிக்குளம், மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் வீதியைப் பயன்படுத்த முடியும்.

இவ் அறிக்கைத் தொடர்பாக பொது மக்கள் அறிந்து கொள்ள உங்களது ஊடக நிறுவனங்கள் மூலம் விளம்பரம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

பொலிஸ் ஊடகப் பிரிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.