டெல்லி: கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 4ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊக்கமருந்து விதியை மீறியதற்காக பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (நாடா அமைப்பு) 4 ஆண்டு இடைநீக்கம் செய்து அறிவித்து உள்ளது. இதையடுத்து, பஜ்ரங் புனியா வெளிநாடுகளில் பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா ஊக்கமருந்து பரிசோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காத […]