Suriya 45: பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் பூஜை – நாளை முதல் படப்பிடிப்பு | சூர்யா 45 அப்டேட்

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கிற `சொர்க்கவாசல்’ திரைப்படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் ஒரு பக்கம் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் ஆர்.ஜே. பாலாஜி. மற்றொரு பக்கம் சூர்யாவின் 45வது திரைப்படத்தை இயக்குவதற்கும் ரெடியாகிவிட்டார். சூர்யா நடிப்பில் கடந்த 14-ம் தேதி திரையரங்குகளில் `கங்குவா’ திரைப்படம் வெளியாகியிருந்தது. கிட்டதட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படத்தின் ரிலீஸ் முடிந்த கையோடு அவருடைய அடுத்தப் படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார் சூர்யா. அவரின் 45-வது திரைப்படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கவிருக்கிறார், அப்படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கிறார் என்ற தகவல்களையெல்லாம் தயாரிப்பு நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. இத்திரைப்படத்திற்கான பூஜை இன்று பொள்ளாச்சியிலுள்ள மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்றிருக்கிறது. சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி உட்பட படக்குழுவினர் பலரும் பூஜையில் கலந்துக் கொண்டனர்.

Suriya 45 Pooja Still

இன்று நடைபெற்ற பூஜையை தொடர்ந்து நாளை முதல் கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே. விஷ்ணு பணியாற்றவிருக்கிறார். `மெர்சல்’, `பிகில்’, `ஜவான்’ என அட்லீயின் ஆஸ்த்தான ஒளிப்பதிவாளராக உருவெடுத்து கவனம் ஈர்த்தவர் விஷ்ணு.

இத்திரைப்படத்தின் கதை வேலைகளுக்காக ஆர்.ஜே. பாலாஜியின் குழு 15 மாதங்கள் செலவழித்திருக்கிறார்களாம். ஆர்.ஜே. பாலாஜி இத்திரைப்படத்தின் கதையை சொல்லி முடித்ததும் சூர்யா இந்தக் கதைக்கு ஓகே டிக் அடித்துவிட்டாராம். நீண்ட வருடங்களுக்குப் பிறகு சூர்யா ஒரு கதைக்கு உடனடியாக ஓகே சொன்னது இத்திரைப்படத்திற்குதான் என ஆர்.ஜே. பாலாஜியும் `சொர்க்கவாசல்’ திரைப்படத்திற்கான பேட்டியில் பகிர்ந்திருந்தார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.