கொழும்பு,
தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் பாதுகாப்பான இடங்களில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 குழந்தைகளும் அடக்கம். கனமழை வெள்ளத்தில் சிலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதேவேளை, மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.