ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை; சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; ம.பி-யில் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் போன்ற அமைப்பில் மத்தியப் பிரதேசத்தில் ஜனனி எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆம்புலன்ஸ் கிராமப்புறங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள், நோய்வாய்ப்பட்ட முதியவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் பழங்குடி மக்களுக்கு அவசரகால உதவிக்காக மாநில அரசால் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், மௌகஞ்ச் மாவட்டம், ஹனுமனா தாலுகாவில் ஜனனி எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸில் தான் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக 16 வயது சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறுமியிடம் விசாரித்ததில், கடந்த 25-ம் தேதி ஜனனி எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸில் வந்த இருவர் தன்னை வலுகட்டாயமாகக் கடத்திச் சென்று, ஓடும் ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தார்கள் என வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் காவல்துறை விசாரித்து வந்தது.

இந்த நிலையில், மௌகஞ்ச் மாவட்டத்தில் உள்ள நைகர்ஹி தாலுகாவில் வசிக்கும் வீரேந்திர சதுர்வேதி (ஆம்புலன்ஸ் டிரைவர்), அவரது நண்பர் ராஜேஷ் கேவட் ஆகியோரை புதன்கிழமை இரவு காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்தக் குற்றம் நடந்த அதே பகுதியில் கடந்த மாதம் 21-ம் தேதி தேனிலவுக்குச் சென்ற தம்பதியில், புதுமணப் பெண்ணைக் கடத்திச் சென்று, 8 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 26-ம் தேதி தண்ணீர் எடுத்த பிற்படுத்தப்பட்ட இளைஞர் 8 பேரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளான நிலையில், இந்த செய்தியும் விவாதமாகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.