மணப்பெண்ணுக்கு மாலையிட்ட மாப்பிள்ளை… கடைசி நேரத்தில் தெரிந்த உண்மை.. நின்று போன திருமணம்!

உத்தரப்பிரதேசத்தில் மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம் வாங்கும் இன்ஜினியர் மாப்பிள்ளையை மணமகள் வேண்டாம் என்று கூறி திருமணத்தைப் பாதியிலேயே நிறுத்திய சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் ஃபருகாபாத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், சத்தீஷ்கர் மாநிலத்தின் பல்ராம்பூரைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கிறது. இதில் நிச்சயத்துக்கு முன்பாக, மணமகன் அரசுப் பொறியாளராக வேலை பார்ப்பதாகவும், மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம் வாங்குவதாகவும், மணமகள் வீட்டாரிடம் இடைத்தரகர் மூலம் தெரிவித்துள்ளனர்.

திருமணம்

மேலும், மணமகனின் குடும்பம் தற்போது உத்தரப்பிரதேசத்தில் கன்னௌஜ் மாவட்டத்தில் வாடகை வீட்டில் குடியிருப்பதாகவும், அதேசமயம் சொந்த ஊரில் இவர்களுக்கு, 6 வீட்டுமனைகள் மற்றும் 12.498 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாகவும் பெண் வீட்டாரிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால், அவர்களும் திருமணத்துக்குச் சம்மதிக்கவே, ஃபருகாபாத்தில் திருமண ஏற்பாடுகளும் நடந்தன.

அதைத் தொடர்ந்து, திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு, மணமகன் குதிரையில் வரும் சம்பிரதாயங்களுடன் மணமகன் குடும்பத்தினர் திருமண மண்டபத்தை வந்தடைந்தனர். அதையடுத்து, மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கு நடந்ததும் மணமகள் தனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறி திருமணத்தை நிறுத்துமாறு அதிர்ச்சியளித்திருக்கிறார். காரணம், மாலை மாற்றிக்கொள்ளும் சம்பவம் நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, மணமகன் அரசுப் பொறியாளர் அல்ல என்ற உண்மை மணமகளுக்குத் தெரியவந்திருக்கிறது.

திருமணம்

பின்னர், மணமகன் குடும்பத்தினர் மணமகளை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றனர். ஒருகட்டத்தில், தான் வேலைபார்க்கும் தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ. 1.2 லட்சம் வாங்குவதற்கான ரசீதை செல்போனில் மணமகளிடம் மணமகன் காட்டினார். ஆனாலும், அரசு வேலை இல்லையென்பதால் தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்பதில் மணமகள் உறுதியாக இருந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.

மணமகன் மாதம் ரூ. 1.2 லட்சம் சம்பளம் வாங்கினாலும், அரசு வேலை இல்லாததால் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.