சென்னை: மத்தியஅரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில்முறையை ஊக்குவிக்கும் என்பதால், அந்த #விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது; என்றும், சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு என ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஏற்கனவே, விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம், பயன், […]