மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் விநியோகிப்பது தொடர்பாக காணப்பட்ட சிக்கல் நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, மீண்டும் வழங்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, வாகன இலக்கத் தகடுகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாம், மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு கட்டணம் செலுத்தி, இதுவரை பெற்றுக் கொள்ளாதிருப்பின், தங்களின் இலக்க வாகனத் தகட்டை 2024 டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2024 டிசம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வீதியில் செல்ல முடியாது போவதுடன், அவ்வாறு தற்காலிக இலக்கத் தகடுகளை உபயோகித்து செல்லும் வாகனங்களுக்காக பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் என அறிவித்துள்ளது.
அவ்வாறே, இதுவரை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக இலக்கத் தகட்டுடன் வாகனத்தை செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திரம் 2024 டிசம்பர் 15ஆம் திகதியுடன் இரத்துச் செய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.a