Ajmer Sharif: `அஜ்மீர் தர்காவில் சிவன் கோயில்?' – இந்து சேனாவின் மனுவும் நீதிமன்ற உத்தரவும்!

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி துறவி மொய்தீன் ஷிஷ்தி தர்கா இருக்கிறது. இந்த தர்கா இருக்கும் இடத்தில் முன்பு சிவன் கோயில் இருந்ததாகவும், அங்கு இந்துகள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், மதுரா மசூதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இந்து சேனாவின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா, அஜ்மீர் நீதிமன்றத்தில் நேற்று மனுதக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவை நேற்றே விசாரணக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம், இந்திய தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ), அஜ்மீர் தர்கா கமிட்டி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும், இது தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணை டிசம்பர் 20 அன்று நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கிறது.

ஏற்கெனவே, உத்தரப்பிரதேச சம்பாலில் ஷாஹி ஜும்மா மஸ்ஜிதில், ஆய்வுக்குட்படுத்திய விவகாரத்தால் அந்தப் பகுதியில் வெடித்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். இன்னும் அந்தப் பகுதியில் முழுமையாக பதற்றம் தனியாத நிலையில், தற்போது இந்த உத்தரவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்து சேனாவின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்,“ஒரு சாராரைத் திருப்திப்படுத்தும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டுவருகிறது. அதனால், கோவில்களை இடித்து மசூதிகள் கட்டும் பிரசாரம் இன்னும் நிறுத்தப்படவில்லை. அஜ்மீரில், நீதிமன்றம் ஒரு கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருக்கிறது அவ்வளவுதான். இதில் என்ன பிரச்சனை? முகலாயர்கள் நமது கோவில்களை அழித்தார்கள்… அதுவரை காங்கிரஸ் அமைதியாகத்தானே இருந்தது. கோவில்களை இடித்து மசூதிகள் கட்டும் இந்த பிரசாரத்தை நேரு தடுத்து நிறுத்தியிருந்தால், இன்று நாம் நீதிமன்றம் செல்லும் நிலை இருக்காது” என்றார்.

பா.ஜ.க எம்.பி ரவி கிஷன், “இந்த விவகாரம் மிகவும் சென்சிட்டிவானது. உணர்வுப்பூர்வமானது. விசாரணையின் மூலம் உண்மை வெளிவரும். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும்போது நாங்கள் எந்தக் கருத்து தெரிவிக்கக் கூடாது. இது விசாரணைக்குரிய விஷயமாக மாறிவிட்டது… எனவே, விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிவரட்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அஜ்மீர் தர்காவுக்கு சதர் ஆடை வழங்கும் மோடி

இது தொடர்பாக பேசிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, “கடந்த 800 ஆண்டுகளாக தர்கா அதே இடத்தில்தான் இருக்கிறது. நேரு முதல் அனைத்துப் பிரதமர்களும் தர்காவிற்கு ‘சதர்’ ஆடை அனுப்புகிறார்கள். பிரதமர் மோடியும் ‘சதர்’ அனுப்புகிறார். ஆனால், மசூதிகள், தர்காக்கள் மீது பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் ஏன் இந்த வெறுப்பை பரப்புகிறது? வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்கள் ஏன் இந்த வழக்கை விசாரிக்கவில்லை? இப்படியே தொடர்ந்தால், சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகமும் எங்கே போகும்? இது நாட்டுக்கு சாதகமான செயலல்ல. மோடி, ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆட்சி நாட்டில் சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தி வருகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/PorattangalinKathai

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.