சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி அதிரடியான ஹிட்டடித்திருக்கிறது, `அமரன்’.
தீபாவளி வெளியீடாக இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் திரைப்படமான இதில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவும் சாய் பல்லவி இந்துவாகவும் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
படம் வெளியாகி பலரிடமிருந்து பாராட்டை பெற்றதோடு வசூலிலும் மிரட்டியது. அதுமட்டுமல்ல திரையரங்குகளில் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்களே தயாரிப்பு நிறுவனத்துக்கு ஓ.டி.டி ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தனர்.

இத்திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பலரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது சென்னையிலுள்ள இராணுவப் பயிற்சி மையம் சிவகார்த்திகேயனை கெளரவித்திருக்கிறார். முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்கு பாராட்டி இராணுவப் பயிற்சி மையம் தற்போது கெளரவித்திருக்கிறது. முகுந்த் வரதராஜனும் இதே இராணுவப் பயிற்சி மையத்தில்தான் பயிற்சி பெற்றார். முகுந்த் வரதராஜன் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற காட்சிகளெல்லாம் திரைப்படத்திலும் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பான புகைப்படங்களில் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்திருக்கிறது. அந்தப் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.
சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். கூடிய விரைவில் `டான்’ சிபி சக்ரவர்த்தி இயக்கும் திரைப்படம் வேலைகளை சிவகார்த்திகேயன் தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
