பிக் பாஸ் நிகழ்ச்சியில் 53 வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8, 50 நாட்களைக் கடந்திருக்கிறது. இந்த வாரம் பொம்மை டாஸ்க் நடந்து வருகிறது. இந்த டாஸ்க்கால் பிக் பாஸ் வீடு கலவர பூமியாக மாறியிருக்கிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டு புரோமோக்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் இரண்டாவது புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த இரண்டாவது புரோமோவில், ஜாக்குலின் மற்றும் ராணவ் இடையில் பொம்மை டாஸ்க் குறித்த வாக்குவாதம் முற்றுகிறது.
இடையில் பேசிய சவுந்தர்யாவை அவர் வாயை மூடு என்று கூற, நீ யார் என்னை வாயை மூடு என்று சொல்வதற்கு என்றும் முதலில் மரியாதைக் கொடு என்றும் அவர் கொதித்தெழுந்துவிட்டார். தொடர்ந்து ஜாக்குலினிடம் ராணவ் சாரி கேட்க மீண்டும் சவுந்தர்யா கோபப்படுகிறார். பொம்மை டாஸ்கால் இவர்களின் சண்டை முற்றிப்போய் இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிசோடில் பார்ப்போம்.