Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! – எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு?

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது.

முன்னதாக புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நாளை மறுநாள் ( நவம்பர் 30) கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Rain Alert – புயல்

புயல் காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் இதேபோல, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.