அரியலூர் அருகே உள்ள இரசுலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவதணன். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்த இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் யூ வின் மங் – டாயஹ்ல் அவின். இவர்களின் மகள் ஏய் ஏய் மோ சிங்கப்பூரில் உள்ள உணவு தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மதிவதணனுக்கும், ஏய் ஏய் மோவுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்தி பழகி வந்துள்ளனர். நாளடையில் இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது. நீயின்றி நானில்லை என்ற நிலையில் இருவரும் சில வருடங்களாக காதலித்துள்ளனர். தமிழக கலாச்சாரத்தை ரொம்பவே விரும்பியிருக்கிறார் ஏய் ஏய் மோ.
இந்த நிலையில், அரியலூரில் மதிவதணனுக்கு அவரது பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அப்போது மியான்மர் பெண்ணை காதலிக்கும் விஷயத்தை தன் பெற்றோரிடம் சொல்லியுள்ளார். நம்ம ஊரு பழக்க, வழக்கம் வேற எப்படிப்பா ஒத்து வரும் என மதிவதணன் பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது அவள் ரொம்ப அன்பானவள் பழகினால் உங்களுக்கே அவளை பிடிக்கும், நம் மண்ணுக்குமல்ல, குடும்பத்துக்கும் ஏத்தவள் என கூறி தன் பெற்றோரின் சம்மதத்தை பெற்றுள்ளார்.
இதே போல், ஏய் ஏய் மோவும் காதலிக்கும் விஷயத்தை சொல்லி தன் பொற்ரோரின் சம்மதத்தை பெற்றுள்ளார். பின்னர் இருதரப்பும் பேசி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மணமக்கள் இருவரும் கடந்த 17-ம் தேதி அரியலூர், ரசலாபுரம் கிராமத்திற்கு வந்தனர். தட புடலாக திருமண ஏற்பாடு நடைபெற்றது. இந்த நிலையில் அரியலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்து முறைப்படி நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
புரோகிதர் சொன்ன ஒவ்வொன்றையும், மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக செய்தார் ஏய் ஏய் மோ. மதிவதணனன் கட்டிய தாலியை தமிழ் பெண்களை போலவே கையில் எடுத்து கண்களில் ஒத்தி கொண்டதை பார்த்த உறவினர்கள் ஆச்சர்யமடைந்தனர். சடங்கு, சம்பிரதாயங்களை ஆர்முடன் செய்தார். இந்த நிலையில் மணப்பெண் ஏய் ஏய் மோவின் பெற்றோருக்கு விமான டிக்கெட் கிடைக்காததால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதனால், திருமணம் முடிந்த பிறகு மியான்மரிலிருந்து வீடியோ கால் மூலம் போன் செய்தார் மணப்பெண்ணின் தாய். பின்னர் மணக்கள் இருவரும் செல்போன் முன்பு விழுந்து பெற்றோரிடம் ஆசி வாங்கினர். அப்போது ஏய் ஏய் மோ ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது. தன் தாய் நேரில் வந்து ஆசிர்வதிக்க முடியாத ஏக்கமும் அவரது முகத்தில் தெரிந்தது. திருமணம் குறித்து தாய் கேட்க நைஸ் என்றார். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் இருவருடைய காதலை மெய்சிலிர்க்க பேசி சென்றனர்.
சாதிக் அலி, மாற்றுமதம் சார்ந்த அன்பர். ஐயப்பன் மீது கொண்ட ஆழ்ந்த பக்தி காரணமாக மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு யாத்திரை மேற்கொண்டார். ஐயப்பன் மீதான பக்தி அவரை மீண்டும் மீண்டும் சபரிமலைக்குச் செல்லத் தூண்டியது. நல்ல குருநாதர் மூலம் மேலும் பக்தியில் பெருகி தன் குருநாதரைப்போலவே சபரிமலைக்கு அங்கப்பிரதட்சிணம் செய்து தரிசனம் செய்யவும் ஆரம்பித்திருக்கிறார். ஐயப்பன் மீதான அவரின் அளவற்ற பக்தி குறித்து விளக்குகிறது இந்த வீடியோ.