“பக்குவமாகப் பேசுவதற்கு கற்றுக்கொள்ள நினைக்கிறேன்!” – நடிகை கஸ்தூரி 

சென்னை: மகனின் படிப்பும், எனது நடிப்பும் தடைப்பட்டுள்ளதால் காவல் நிலையத்தில் கையெழுத்திடும் நடைமுறையில் தளர்வு கோரியுள்ளேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், கடந்த 21-ம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த அவர், தினமும் எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். அந்த வகையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட வந்த கஸ்தூரி, செய்தியாளர்களிடம் கூறியது: “ஆக்ரோஷத்தை குறைத்துவிட்டு, அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்பது எனது முடிவாக உள்ளது. குறிப்பாக, பக்குவமாக உணர்ச்சிவசப்படாமல் பேசுவது எப்படி என்பதை 30 நாட்களில் கற்றுக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

4 ஆண்டுகளாக ஹைதராபாத்தில்தான் வசித்து வருகிறேன். இரண்டு படம், ஒரு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. எனது மகனும் அங்கேதான் படித்து வருகிறார். மகனின் படிப்பும் தடைபட்டு இருப்பதால், போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடும் நடைமுறையில் தளர்வு கோரி உள்ளேன். இதுதொடர்பான மனு, வரும், 2-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

எனக்கு விருப்பமான நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன். கானா பாடகி இசைவாணி விவகாரத்தில், அவர் மீது நடவடிக்கை எடுக்காததற்கான பதில் அனைவருக்கும் தெரியும். எனது கைது விவகாரத்தில் திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விசிக கட்சியினரும் பொதுமக்களும் ஆதரவு அளித்தனர். அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.