தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக (ஃபெங்கல்) மாறியிருக்கிறது. இப்புயல் நாளை (நவ. 30) பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கவிருக்கிறது.
இதனால் நாளை (நவ.30) 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். மேலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் தரைக் காற்று 70 கி.மீ வேகத்தில் வீசும் என்றும் புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அடுத்த மூன்று நாட்களான நவம்பர் 30, டிசம்பர் 1,2 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது, மழை எப்படியிருக்கும் என்பதைப் பற்றி வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்ட இயக்குநர் பாலச்சந்திரன் விரிவாகப் பேசியதன் தொகுப்பு இது.
நாளை நவம்பர் 30-ம் தேதி
ரெட் அலார்ட் (அதி கனமழை):
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி.
ஆரஞ்சு அலார்ட் (மிக கனமழை):
வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால்.
மஞ்சள் அலார்ட் (கனமழை):
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர்.
டிசம்பர் 1ம் தேதி
ஆரஞ்சு அலார்ட் (மிக கனமழை):
நிலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு.
மஞ்சள் அலார்ட் (கனமழை):
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை.
டிசம்பர் 2, 3 தேதிகள்
மஞ்சள் அலார்ட் (கனமழை):
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு.
வட தமிழக கடலோரப் பகுதிகளான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் அப்பகுதிகளில் 90 கி.மீ வரை பலத்த காற்று வீசக் கூடும்.
புயலால் கடலில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்களுக்கு அடுத்த இரண்டு நாட்கள் (நவ.30, டிச. 1) கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (நவ.30) ஃபெஞ்சல் புயல் வலுப்பெற்று புயலாகவே கரையைக் கடக்கும் என்பதால் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் அதி கனமழையும், பலத்த காற்றும் வீசும் என்பது உறுதியாகக் கூறப்பட்டிருக்கிறது. சென்னையில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யவிருக்கிறது. இன்று இரவே அதி கனமழை ஆரம்பமாகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. மக்களும் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…