இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பும்ரா தலைமையிலான இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தனக்கு குழந்தை பிறந்ததால் முதல் டெஸ்ட்டில் பங்கேற்காத ரோஹித் சர்மா, அடிலெய்டில் இரண்டாவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலியா சென்றடைந்திருக்கிறார்.

2-வது டெஸ்ட் முதல் மீதமிருக்கும் போட்டிகளில் இந்திய அணியை இவரே வழிநடத்துவார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று இந்திய வீரர்களுக்குப் பிரதமர் மாளிகையில் விருந்தளித்தார். அதைத்தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உரையாற்றினார்.
அந்த உரையில் ரோஹித் சர்மா, “விளையாட்டு மற்றும் வர்த்தகத்தில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நீண்ட உறவு உள்ளது. நாங்கள் இங்கு மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம். ரசிகர்களின் ஆர்வத்தாலும், பிளேயர்ஸின் போராட்ட குணத்தாலும் ஆஸ்திரேலியா ஒரு சவாலான அணியாக இருக்கிறது. உலகின் தலைசிறந்த அணிக்கெதிராக களமிறங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம் ஆஸ்திரேலியாவில் நாங்கள் வெற்றி இலக்கை அடைந்திருக்கிறோம்.
The Indian Cricket Team were hosted by the Honourable Anthony Albanese MP, Prime Minister of Australia at the Parliament House, Canberra. #TeamIndia will take part in a two-day pink ball match against PM XI starting Saturday. pic.twitter.com/YPsOk8MrTG
— BCCI (@BCCI) November 28, 2024
சமீபத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறோம். அந்த வேகத்தை நாங்கள் மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறோம். மீதமுள்ள போட்டிகளில் இருநாட்டு ரசிகர்களையும் மகிழ்விப்போம். நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை எதிர்நோக்குகிறோம். அதேசமயம் இந்த நாட்டையும் ரசிக்கிறோம். மேலும், இங்கிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை இங்கு அழைத்ததற்கு நன்றி.” என்று கூறினார்.
டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலர் உணவின் அளவை பெரிய அளவில் குறைத்து எடையைக் குறைக்க முயல்வார்கள். இன்னும் சிலர் கார்போஹைட்ரேட்டே வேண்டாம் என அதை முற்றிலும் தவிர்ப்பார்கள். தவறான உணவுப்பழக்கம் தவிர, வேறு சில பழக்கங்களாலும் சராசரியைவிட முன்னதாகவே முதுமைத்தோற்றம் வந்துவிடும். உதாரணத்துக்கு, பெரிய தலையணை வைத்துப் படுப்பது. ஒருக்களித்துப் படுக்கும்போது, கன்னத்தை, தலையணையில் அழுத்திப் படுப்பது போன்றவை.

தினமும் காலையில் எழுந்ததும் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், கிரேப்சீட் எண்ணெய் போன்ற ஏதேனும் ஓர் ஆயிலில் சிறிது எடுத்து முகத்தை மசாஜ் செய்யப் பழகுங்கள். முகத்தில் மேல்நோக்கி மசாஜ் செய்வதன் மூலம் சுருக்கங்கள், கோடுகள் போன்றவை தவிர்க்கப்படும். இந்த மசாஜுக்கு பிறகு நீங்கள் வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தக்கூடிய பேக் ஒன்றையும் உபயோகிக்கலாம்.

அந்த பேக் செய்ய பார்ஸ்லி இலைகள் அடிப்படை. பார்ப்பதற்கு கொத்தமல்லி இலைகளைப் போலக் காட்சியளிக்கும் இதற்கு சருமத்தின் நீர்த்துவத்தைத் தக்கவைக்கும் தன்மை உண்டு. கைப்பிடி அளவு பார்ஸ்லி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு 30 நொடிகள் வைத்திருந்து, அடுப்பை அணைத்து மூடி வையுங்கள். பிறகு அந்தக் கீரையை எடுத்து மிக்சியில் அரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அந்தச் சாற்றில் 3 டீஸ்பூன் கார்ன் ஃப்ளார், அதே அளவு கயோலின் பவுடர், 30 மில்லி ஜோஜோபா ஆயில் எல்லாவற்றையும் நன்கு கலந்து கொள்ளவும்.
தலையை உயர்த்திவைத்துப் படுத்துக்கொள்ளுங்கள். கைகளை உபயோகித்து இந்த பேக்கை கழுத்திலிருந்து முகத்தில் மேல்நோக்கித் தடவுங்கள். அது காயும்வரை பேசக்கூடாது. பிறகு கைகளை தண்ணீரில் நனைத்து வட்டவடிவமாகத் துடைத்து எடுத்துவிட்டு, வெறும் தண்ணீரில் கழுவி விடலாம். 3 நாள்களுக்கொரு முறை இதைப் பின்பற்றினாலே நல்ல மாற்றத்தைப் பார்ப்பீர்கள். தளர்ந்த சருமம் டைட் ஆகும். இத்துடன் உங்கள் உணவுப்பழக்கத்தையும் சரி பாருங்கள். முறையான ஆலோசனையோடு டயட்டை பின்பற்றுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.