விஜய்யின் 69-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இராணுவப் பயிற்சி மையம் உட்பட பல்வேறு பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
அ. வினோத் இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் முழுமையாக அரசியல் பக்கம் களமிறங்குவதாக அறிவித்திருக்கிறார் விஜய். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதைத் தாண்டி ப்ரியா மணி, மமிதா பைஜு, பாபி தியோல் எனப் பல நட்சத்திரங்களும் படத்தில் நடித்து வருகிறார்கள்.
`படத்தில் இந்த நட்சத்திரங்களெல்லாம் கேமியோ செய்கிறார்கள்… அனிருத் இசையில் இந்த பாடகர் முதல் பாடலை அதிரடியான ராப் வரிசையில் கொடுத்திருக்கிறார்’ என பல தகவல்கள் சமூல வலைதளங்களில் இப்படம் தொடர்பாக அவ்வப்போது பேசப்பட்டு வருகின்றன. ஆனால், தகவல்களாக பேசப்பட்ட எந்த விஷயம் குறித்தும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. கடந்த சில நாட்களாக `தளபதி 69′ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் `பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் ரீமேக் ரைட்ஸ் வாங்கியிருப்பதாக தகவல்கள் சமூக வலைதளப் பேசப்படு வருகிறது.
`பகவந்த் கேசரி’ பாலைய்யா நடிப்பில் கடந்தாண்டு டோலிவுட்டில் வெளியான திரைப்படம். இத்திரைப்படத்தை ரீமேக் செய்து பாலைய்யா கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் அவரின் மகளாக மமிதா பைஜூ நடிப்பதாகவும் சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்கையில், `அதெல்லாம் உண்மை இல்லை. தளபதி 69-வது திரைப்படம் பகவந்த் கேசரி படத்தோட ரீமேக் கிடையாது. `தளபதி 69′ ஒரு ஆக்ஷன் திரைப்படம். மற்றபடி சோசியல் மீடியாவுல வர்ற தகவல்களெல்லாம் உண்மை கிடையாது.’ என்றனர்.
விஜய்யின் கடைசி திரைப்படம் இதற்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படம் `பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் எனக் கூறப்பட்ட நிலையில் அது உண்மையான செய்தி கிடையாது என தகவல் கிடைத்திருக்கிறது.
Vikatan Play: நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…