இந்தியா – ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி பயிற்சி ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த தொடக்க டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி (பகல்-இரவு போட்டி) தொடங்குகிறது.

இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று தொடங்க இருந்தது.

ஆனால் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.