இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
2024 நவம்பர் 30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2024 நவம்பர் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் (FENGAL) பெஞ்சல் சூறாவளி நேற்றிரவு (29) 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துறைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்ததாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது மேற்கு திசை ஊடாக, வடமேல் திசை நோக்கி நகர்ந்து இன்று (30) மாலை வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மேகமூட்டமான நிலை காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தில் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன், மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கிலோ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேலைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீச கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறித்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்