உ.பி.யின் சம்பல் மசூதியில் சட்டவிரோத கட்டுமானங்கள்: நீதிமன்றத்தில் ஏஎஸ்ஐ தாக்கல் செய்த மனுவில் தகவல்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தின் சம்பலில் இருந்த கல்வி அவதாரக் கோயிலை இடித்து​விட்டு ஜாமா மசூதி கட்டப்​பட்​டதாக புகார் எழுந்​துள்ளது. இது தொடர்பான வழக்கை விசா​ரித்த நீதி​மன்றம் பிறப்​பித்த உத்தர​வின்​படி, மசூதி​யில் நடத்​தப்​பட்ட களஆய்​வின்​போது கலவரம் மூண்​டது. இதில் 4 பேர் உயிரிழந்​தனர்.

இந்நிலை​யில், இதுகுறித்து சம்பலின் சிவில் செஷன்ஸ் நீதி​மன்​றத்​தில் இந்திய தொல்​பொருள் ஆய்வு கழகம்​(ஏஎஸ்ஐ) தரப்​பில் சமர்ப்​பிக்​கப்​பட்ட மனு வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1920-ம் ஆண்டு சம்பலின் மசூதி, ஏஎஸ்​ஐ​யின் வரலாற்று சின்னமாக அறிவிக்​கப்​பட்​டது. அப்போது முதல் அம்மசூ​தியை கண்காணிக்​கும் பொறுப்பு ஏஎஸ்​ஐ​யிடம் ஒப்படைக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 1998-ல் மட்டும் ஏஎஸ்​ஐ​யால் மசூதி​யினுள் செல்ல முடிந்​தது. அதன் பிறகு கடந்த ஜுலை மாதம் மாவட்ட நிர்​வாகம் மற்றும் காவல் துறை​யின் உதவி​யால் உள்ளே சென்று பார்​வையிட முடிந்​தது. அப்போது சட்ட​விரோதமாக பல கட்டு​மானங்கள் கட்டப்​பட்​டிருப்பதை பார்க்க முடிந்​தது. இது வரலாற்று சின்னங்கள் பாது​காப்பு சட்டம் 1958-ஐ மீறும் செயல். மசூதி​யின் அடித்​தளத்​தையும் பல அறைகளாகப் பிரித்து கடைகளாக்கி மசூதி நிர்​வாகத்​தால் வாடகை வசூலிக்​கப்​படு​கிறது.

2018 -ல் போலீஸில் புகார் செய்​தும் பலனில்லை. தடுப்புகளை அகற்று​மாறு கடந்த பிப்​ரவரி 16, 2019-ல் ஆக்ரா ஏஎஸ்ஐ கண்காணிப்​பாளர் உத்தர​விட்டும் பலனில்லை. மசூதி​யின் தரைகள் புதுப்​பிக்​கப்​பட்டு, கட்டிடத்​தின் மீது பல முறை வர்ணங்​களும் பூசப்​பட்​டுள்ளன. இதனால், மசூதி​யின் உண்மையான வரலாற்று வடிவத் தன்மை மாற்​றப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இதனிடையே, உ.பி. எதிர்க்​கட்​சித் தலைவரும் சமாஜ்வாதி மூத்த தலைவருமான மாதாபிரசாத் பாண்டே தலைமையிலான 15 பேர் அடங்கிய குழு​வினர், சம்பல் கலவரத்​தில் உயிரிழந்​தவர்கள் குடும்பத்​தினரை சந்திக்க நேற்று சென்​றனர். அவர்கள் தடுத்து நிறுத்​தப்​பட்​டனர். இதனிடையே, உயி​ரிழந்​தவர்​கள் குடும்பத்​தினருக்கு தலா ரூ.5 லட்​சம் நிவாரணமாக வழங்​கப்​படும் என ச​மாஜ்வாதி தலை​வர் அகிலேஷ் ​யாதவ் அறி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.