சர்வதேச பேட்மிண்டன்: பி.வி. சிந்து, லக்சயா சென் அரையிறுதிக்கு தகுதி

லக்னோ,

சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென் 21-8, 21-19 என்ற நேர்செட்டில் சக நாட்டை சேர்ந்த மிராபா லுவாங்கை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதே போல் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் நுயென் ஹாய் டாங்கை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதியில் 2 முறை சாம்பியனான இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் டெய் வாங்குடன் மோதினார். இந்த ஆட்டத்தில் சிந்து 21-15, 21-17 என்ற நேர்செட்டில் டெய் வாங்கை வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.