சென்னை நாளை தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நேற்று வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவுக்குள் கரையை கடக்க உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. […]