RJ Balaji : `மக்களுக்கு பிடிச்ச மாதிரி படம் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கோம்!' – ஆர்.ஜே.பாலாஜி

நடிகர் RJ பாலாஜி நடிப்பில் உருவாகி , நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் `சொர்க்க வாசல்’

இதற்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது . ட்ரைலரில் வந்த காட்சிகள் மற்றும் RJ பாலாஜியின் நடிப்பு படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .

இந்நிலையில் நேற்று மாலை கோவை ப்ருக்ஃபீல்ட்ஸ் மாலிலுள்ள திரையரங்கில் சொர்க்கவாசல் திரைப்படத்தைக் கண்டார் RJ பாலாஜி . ரசிகர்களுடன் திரைப்படம் கண்ட அவர் படம் முடிந்ததும் ரசிகர்களுடன் உரையாடி, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார் .

RJ Balaji

அப்போது அவர் ,”சொர்க்கவாசல் இன்னைக்கு ரிலீஸ் ஆகிருக்கு , நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு. சென்னைல மழை நிறைய பெய்யுது, அதனால இன்னைக்கு இங்க கோயம்புத்தூர்ல பாத்துருக்கேன். மக்களுக்கு பிடிச்ச மாதிரியான படம் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கோம், அதுல வெற்றி அடைஞ்சிருக்கோம்னு நம்புறேன். மதியானம் ஷோவை விட ஈவ்னிங் ஷோ 50% நிறைஞ்சிருக்குன்னு சொன்னாங்க , சந்தோஷமா இருக்கு. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைல இன்னும் அதிகரிக்கும்னு எதிர்பார்க்குறோம்” என்றார் .

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.