மின் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: வாரியத் தலைவருக்கு சிஐடியு கடிதம்

சென்னை: மின் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பபின் (சிஐடியு) பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மின்வாரியத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 2023-ம் ஆண்டு டிச.1-ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கியிருக்க வேண்டும். மின்வாரிய நிர்வாகம் அதற்கான பேச்சுவார்த்தை குழுவை இன்னும் அமைக்கவில்லை. இதற்கு முந்தைய பேச்சுவார்த்தையிலும் படித்தொகை உயர்த்தப்படவில்லை. ஏறத்தாழ 60 ஆயிரம் … Read more

தெலங்கானாவில் புலி தாக்கி இளம்பெண் உயிரிழப்பு

தெலங்கானா மாநிலம், குமரம்பீம் அசிஃபாபாத் மாவட்டம், கன்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (21). இவர் நேற்று காலை வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது புலி பாய்ந்து, கழுத்தை கவ்வியது. உடன் இருந்தவர்கள் அலறியதால் வனப்பகுதிக்குள் புலி தப்பியோடி விட்டது. பலத்த காயமடைந்த லட்சுமியை, காகஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் காகஜ்நகர் வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினரின் அலட்சிய … Read more

ரெட் அலர்ட் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை – விமான சேவைகள் ரத்து: சென்னையை நெருங்குகிறது ஃபெஞ்சல் புயல்…

சென்னை: கடந்த 4 நாட்களாக சென்னை மக்களை மிரட்டி வந்த ஃபெஞ்சல் புயல் இன்று மதியம்  சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூறாவளியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  மேலும் சென்னையில் பல விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. தற்போது இந்த புயலானது சென்னையில் இருந்து தலா 190 கி.மீ., தொலைவிலும், … Read more

ஃபெஞ்சல் புயல்: மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை: புயல் இன்று கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்தப்பட கூடாது. ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். புயல் கரையை கடக்கும்போது ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். கனமழை, புயல் காற்றுக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் தேவையின்றி … Read more

மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும் முதல் புல்லட் ரயில்: உள்நாட்டில் தயாராகிறது

இந்திய ரயில்வேயின் முதல் புல்லட் ரயில், கவாச் தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது எனவும், இது சராசரியாக 250 கி.மீ வேகத்தில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் திட்டம் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகள் கூறியதாவது: புல்லட் ரயில் தயாரிப்பை இந்திய ரயில்வே வேகப்படுத்தியுள்ளது. உள்நாட்டில் புல்லட் ரயில்கள் மற்றும் அதிவேக வழித்தடத்துக்கான சிக்னல் கருவிகளை தயாரிப்பதில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் தே.ஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால், புல்லட் ரயில் பணிகள் வேகம் எடுத்துள்ளன. … Read more

மலேசிய தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மறைவு: ரூ.40,000 கோடியை உதறி துறவியான மகன்

மலேசியாவில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், ஊடகம், எண்ணெய்-எரிவாயு, ரியல் எஸ்டேட் என ஏகப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் “ஏகே” என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆனந்த கிருஷ்ணன். இலங்கை தமிழரான இவர், மலேசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி ரூ.40,000 கோடி சொத்துகளுக்கு சொந்தக்காரரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் மலேசியாவில் நேற்றுமுன்தினம் (நவ.28) காலமானார். இதுகுறித்து அவரது தனியார் முதலீட்டு நிறுவனமான உசாஹா தேகாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எங்களது தலைவர் டி. … Read more

கர்நாடக முதல்வர் சித்தராமையா – பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், எரிசக்தி துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். சித்தராமையாஅப்போது விவசாயம், நீர்வளம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பான கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்தார். கர்நாடக மாநிலத்திற்கு 2023-24 ல் ரூ.5,600 கோடியாக இருந்த … Read more

புதுச்சேரி அருகே இன்று புயல் கரையை கடக்கிறது: மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்

சென்னை: வங்​கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்​சல்’ புயலாக வலுப்​பெற்றுள்​ளது. இது புதுச்​சேரி அருகே இன்று பிற்​பகல் கரையை கடக்​கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது. இதன் காரண​மாக, சென்னை உள்ளிட்ட 7 மாவட்​டங்​களில் அதிக​னமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. புயல் கரையை கடக்​கும் நேரத்​தில் 90 கி.மீ. வேகத்​தில் சூறாவளி காற்று வீசக்​கூடும் என்றும் எச்சரிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்​திரன் நேற்று … Read more

காக்கிநாடா துறைமுகம் கடத்தல்காரர் கூடாரமாக கூடாது: பவன் கல்யாண் எச்சரிக்கை

ஆந்திர மாநிலம், காக்கிநாடா துறைமுகம் வழியாக ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுவதால், இது கடத்தல் காரர்களின் கூடாரமாகி விட்டதாகவும், அதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நேற்று அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார். காக்கிநாடா துறைமுகம் வாயிலாக சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 640 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பிடிப்பட்டன. இவற்றை நேற்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் … Read more

மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கிய சிங்கப்பூர் தமிழருக்கு அதிர்ஷ்டம்: குலுக்கலில் ரூ.8 கோடி பரிசு விழுந்தது

மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கிய சிங்கப்பூர் தமிழருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. குலுக்கலில் அவருக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள பரிசு கிடைத்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் சிதம்பரம். தமிழரான இவரது பெற்றோர் தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்று வசித்து வருகின்றனர். 21 ஆண்டுகளாக பாலசுப்பிரமணியம் சிதம்பரம் சிங்கப்பூரில் புராஜக்ட் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள முஸ்தபா ஜுவல்லரிக்குச் சென்று தனது மனைவிக்காக 6 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மதிப்பில் தங்கச் சங்கிலி வாங்கினார். … Read more