நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 25-ம் தேதி தொடங்குகிறது

புதுடெல்லி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.25-ல் தொடங்குகிறது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். மேலும் இந்த குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20 வரை நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:- மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் வரும் 25-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை இரு அவைகளிலும் நடத்த … Read more

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; ஜெசிகா பெகுலா அதிர்ச்சி தோல்வி

ரியாத், உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா பெகுலா, செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெசிகா பெகுலா 3-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவாவிடம் அதிர்ச்சி … Read more

வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 பேர் பலி

காசா, பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த ஓர் ஆண்டாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் இதுவரை சுமார் 43 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் காசாவில் போரை நிறுத்த வேண்டுமென உலக நாடுகள் இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிக்கும் வரையில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறி வரும் இஸ்ரேல் காசா மீதான … Read more

Hero Xtreme 250R – ஸ்டைலிஷான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R அறிமுகமானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள 30bhp பவரை வெளிப்படுத்துகின்ற நேக்டூ ஸ்போர்ட்டிவ் எக்ஸ்ட்ரீம் 250R பைக்கினை EICMA 2024 கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள புதிய 250cc, DOHC, லிக்யூடு கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,250rpm-ல் 30 bhp பவர் மற்றும் 7,250rpm-ல் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.  இந்த எஞ்சின் 0-60 கிமீ வேகத்தை … Read more

திருவாரூர்: ”போக்சோ புகாரை வாபஸ் வாங்கு” – மனைவியைத் துப்பாக்கியால் மிரட்டிய அதிமுக பிரமுகர் கைது

திருவாரூர் கே.டி.ஆர் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (42). இவர் 27வது வார்டு அ.தி.மு.க செயலாளராக இருக்கிறார். இவருடைய மனைவியின் பெயர் தாய் மீனாட்சி. பாலாஜியின் அப்பா ரங்கநாதன் (70). இந்நிலையில் கடந்த ஆண்டு தனது 13 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, ரங்கநாதன் மீது திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாய் மீனாட்சி புகார் அளித்தார். குடும்ப பிரச்னை தொடர்பாகப் பொய் புகாரைத் தாய் மீனாட்சி கொடுத்திருப்பதாக அப்போது பேசப்பட்டது. போக்சோ வழக்கு தொடர்பான … Read more

ஹெச்.ராஜாவின் பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு

மதுரை: பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் பாஸ்போர்டை புதுப்பித்து தர உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “எனது பாஸ்போர்ட் செல்லுபடியாகும் தேதி முடியும் தருவாயில், அதை புதுப்பிக்க கோரி மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் எனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்த அதிகாரிகள், எனக்கு விளக்கம் கேட்டு கடந்த பிப்ரவரி 2 ம் தேதி நோட்டீஸ் அனுப்பினர். … Read more

நவ.25 முதல் டிச.20 வரை நடக்கிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20-ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று கூறுகையில், ” இந்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை (நாடாளுமன்றத் தேவைகளுக்கு உட்பட்டு) நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்தும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு அந்த நாட்டின் 50 மாகாணங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டனர். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார். தற்போதைய அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், … Read more

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து இந்தியா விண்ணப்பம்

2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. இந்தியா தவிர மேலும் 9 நாடுகள் 2036ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. அதில், மெக்சிகோ (மெக்சிகோ சிட்டி, குவாடலஜாரா-மான்டேரி-டிஜுவானா), இந்தோனேசியா (நுசன்டாரா), துருக்கி (இஸ்தான்புல்), போலந்து (வார்சா, கிராகோவ்), எகிப்து ( புதிய நிர்வாக தலைநகரம்), மற்றும் தென் கொரியா (சியோல்-இஞ்சியோன்) ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில் … Read more

சாத் பூஜை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, சூரியனைப் போற்றி வணங்கும் மாபெரும் இந்து பண்டிகையாக சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 4 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் பொதுமக்கள் நீர்நிலைகளில் நின்று சூரியனை வழிபட்டு நன்றி தெரிவிப்பது வழக்கம். இந்த நாட்களில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின்போது மக்கள் வழிபடுவார்கள். பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் மிகுந்த உற்சாகத்துடன் சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான சாத் … Read more