ஐ.பி.எல்.2025; கொல்கத்தா அணி என்னை தக்க வைக்கும் என்று எதிர்பார்த்தேன் ஆனால்… – வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா, இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணியானது பல அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது. அந்த வகையில் … Read more

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் 9 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி

வாஷிங்டன்: அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இந்த முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அத்துடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய வம்சாவளி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு (கீழவை) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் 5 … Read more

Hero karizma xmr 250 – ஸ்போர்ட்டிவான ஹீரோ கரீஸ்மா XMR 250 அறிமுகமானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபேரிங் ஸ்டைல் ஏரோடைனமிக்ஸ் டிசைன் பெற்ற கரீஸ்மா XMR 250 பைக்கினை EICMA 2024 கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கில் உள்ள எஞ்சின் உட்பட பாகங்களை பகிர்ந்து கொள்ளுகின்ற கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 250 மாடலில் உள்ள 250cc, DOHC, லிக்யூடு கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,250rpm-ல் 30 bhp பவர் மற்றும் 7,250rpm-ல் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 … Read more

Kerala: விஷம் கொடுத்து காதலனைக் கொன்ற வழக்கு; காதலி குறித்து மருத்துவர் அதிர்ச்சி தகவல்

கேரள மாநிலம், பாறசாலை மூல்யங்கரையைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். இவரும் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த கிரீஷ்மாவும் காதலித்து வந்தனர். கிரீஷ்மாவுக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரீஷ்மா கஷாயம் கொடுத்ததைத் தொடர்ந்து ஷாரோன் ராஜ் திடீர்  உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார். இறந்த ஷாரோன் ராஜ் ஷாரோன் ராஜிக்கு அவரது காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்ததால்தான் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்ததாக காவல்துறை … Read more

‘தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அசாதாரண சூழ்நிலை’ – கடிதத்தால் பரபரப்பு

மதுரை: இதுவரை எப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம் வெளியானதால், மருத்துவத் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் போன்றவை உள்ளன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், … Read more

சாதிவாரி கணக்கெடுப்பை காங். வலியுறுத்துவது ஏன்? – ராகுல் காந்தி விவரிப்பு

ஹைதராபாத்: உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு நம் நாட்டில் தான் அவ்வளவு ஜாதிகள் உள்ளன. ஆதலால் தான் காங்கிரஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என வலியுறுத்துகிறது என்று செவ்வாய்க்கிழமை (நவ.05) மாலை ஹைதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி வலியுறுத்தி பேசினார். தெலங்கானா மாநிலத்தில் புதன் கிழமை முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக 36,559 அரசு பள்ளி ஆசிரியர்களும், 3414 தலைமை ஆசிரியர்களும் வீடு வீடாக சென்று பணியாற்ற அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. … Read more

நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு…

நடிகை கஸ்தூரி மீது இருபிரிவு மக்களிடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாகவும் பிராமணர்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி சட்டம் வேண்டும் என வலியுறுத்தி சென்னை எழும்பூரில் 2 நாட்களுக்கு முன் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி சார்பில் நவம்பர் 3ம் தேதி அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை … Read more

பிரதமர் மோடிக்காக நிறுத்தப்பட்ட ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர்; ஜனாதிபதியிடம் ஜே.எம்.எம். புகார்

ராஞ்சி, பிரதமர் நரேந்திர மோடியின் ஜார்க்கண்ட் வருகையின்போது பாதுகாப்பு காரணம் காட்டி, முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டரை எடுக்க அனுமதி அளிக்காமல் தாமதம் செய்தது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஜே.எம்.எம். செய்தித் தொடர்பாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா கடிதம் எழுதியுள்ளார். அனைத்துக் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜனதிபதியிடம் கடிதம் வாயிலாக அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், மாநிலத்தின் முதல்-மந்திரியுமான … Read more

மீண்டும் ஆசியா – ஆப்பிரிக்கா கிரிக்கெட்; இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் ஆட வாய்ப்பு

கேப்டவுன், ஆசியா – ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் முறையாக 2005-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இந்த போட்டி தொடர் நடைபெற்றது. அடுத்து 2007ம் ஆண்டு இந்தியாவில் ஆப்பிரிக்கா – ஆசிய கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த இரண்டு முறையும் ஆசிய அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் இது பற்றி ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள், … Read more

கொலம்பியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

பீஜிங், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்கு கடற்கரைக்கு அருகே இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.44 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் முதலில் 5.25 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 77.50 டிகிரி மேற்கு தீர்க்கரேகையில் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் … Read more