இந்த வார ராசிபலன் நவம்பர் 4 முதல் 13 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

ரூ.2.85 கோடியில் ‘முதல்வர் படைப்பகம்’ – சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழக அரசு சார்பில் சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கும் சூழலை ஏற்படுத்தவும், புத்தொழில் தொடங்குவோர் குறைந்த கட்டணத்தில் தங்கள் அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ளவும், முதல்வரின் தொகுதியான கொளத்தூர் ஜெகந்நாதன் தெருவில் ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையம் (Co-working Space) அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வடசென்னை … Read more

கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்: கனடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்

ஒட்டாவா: இந்து கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாதக் குழுவினர் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளது. கனடாவின் டொரண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்து சபா கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கனடாவில் தூதரக முகாமுக்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் … Read more

லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி மரணம்: இஸ்ரேல் ராணுவம் தகவல்

டெல் அவிவ்: தெற்கு லெபனான் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்கு பகுதியில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த தீவிரவாத குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனிடையே, ஹமாஸுக்கு … Read more

விரைவில் ஓய்வை அறிவிக்கும் விராட் மற்றும் ரோஹித்! இதுதான் கடைசி தொடர்!

ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற வீரர்கள் இந்திய அணிக்காக நீண்ட நாட்களாக விளையாடி வருகின்றனர். சமீபத்திய போட்டிகளில் இவர்கள் சரியாக விளையாடாததால் ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிசிசிஐ அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்சிப் சுழற்சியின் தொடக்கத்திற்கு முன் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறது. ​நியூசிலாந்து அணிக்கு எதிரான வரலாற்று தோல்வி பிசிசிஐயை இப்படி சிந்திக்க வைத்துள்ளது. அடுத்த மாதம் … Read more

செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை.

செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை. காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த கண்ணகி, கோவலன் இருவரும் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தனர். அவர்களை வழியில் சந்தித்த கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி, அவர்களை மதுரையிலுள்ள மாதரி என்பவளின் வீட்டில் அடைக்கலமாக தங்கச் செய்தாள். கண்ணகியின் கணவன் கோவலன், மனைவியின் சிலம்பை விற்று தொழில் துவங்கலாம் என்ற நோக்கத்தில் ஊருக்குள் சென்றான். இவ்வேளையில், அவ்வூரை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்பை அபகரித்த அரண்மனை பொற்கொல்லன், அந்தப் பழியை கோவலன் மீது போட்டான். இதை … Read more

தஞ்சாவூருக்கு 7-ம் தேதி வரும் உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவிடுவதா? – ஹெச்.ராஜா கேள்வி

சென்னை: தஞ்சாவூர் செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து கோயில்களின் நிதியில் இருந்தும் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யப்படுவதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: உதயநிதி ஸ்டாலினை பழநி முருகன் மாநாட்டில் பேச வைத்தனர். ‘‘இது ஆன்மிக மாநாடு அல்ல’’ என்று அவர் பேசுகிறார். அப்படியென்றால், அதற்கு ஏன்கோயில் நிதியை செலவு செய்தனர். கோயில் நிதியை எடுத்து அரசியல் மாநாடு நடத்துகின்றனர். … Read more

காஷ்மீரில் முதல் சட்டப்பேரவை கூட்டம்: சபாநாயகராக அப்துல் ரஹீம் ரத்தேர் தேர்வு

ஸ்ரீநகர்: கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு கடந்த செப்டம்பர் – அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜக 29 இடங்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. 6 ஆண்டுக்கு பிறகு: … Read more

சிதமம்பரம் கோவிலில் புதிய கொடிமரம் நட நீதிமன்றம் தடை

சிதம்பரம் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் நட நீதிமன்றம் தடை விதித்துள்ளது கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளத  இந்த கோவிலில் நடராஜருக்கு மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது  அதே வேளையில் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தில்லை கோவிந்தராஜ பெருமாள் … Read more

மெரினாவில் போலீஸாருடன் தகராறு செய்த இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சென்னை: மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் போலீஸாருடன் தகராறு செய்த நபர் மற்றும் அவரது தோழியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை மெரினா லூப் சாலையில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸார் எடுக்கும்படி கூறியுள்ளனர். இதி்ல் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த காரில் வந்த வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மயிலாப்பூரைச் சேர்ந்த தனலட்சுமி ஆகிய இருவரும் காவல்துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட … Read more