கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 90.83 லட்சம் பேர் பயணம்

சென்னை கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 98.23 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னைமெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மேமாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் … Read more

2024 (2025) ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2024 (2025) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பங்களை 2024 நவம்பர் 05 ஆம் திகதி முதல் 2024 நவம்பர் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமையில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இரு தொடர்பாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள ஊடாக அறிக்கை பின்வருமாறு..

Bharat Tex 2025: "உள்நாட்டிலிருந்து 2 லட்சம் பேர் பங்கேற்பர்" – கரூர் ஜவுளி உற்பத்தியாளர் சங்கம்

புதுடெல்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14 முதல் 17 வரை நடைபெற உள்ள ‘பாரத் டெக்ஸ் – 2025’ என்ற பெயரிலான ஜவுளி கண்காட்சிக்கான ஏற்றுமதியாளர்கள் விழிப்புணர்வு கூட்டமானது கரூர், ரெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பாக நடைபெற்றது. கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கைத்தறி ஏற்றுமதி முன்னேற்றச் சபையின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர், விசைத்தறி ஏற்றுமதி முன்னேற்றச் சபையின் … Read more

விழுப்புரம் – திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து

விழுப்புரம்: திருச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே மேம்பாலத்தை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், விழுப்புரம் – திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் ரயில்கள் பகுதியவில் ரத்து, புறப்படும் இடம் மற்றும் ரயில் நிறுத்தி இயக்கம் மாற்றம் போன்றவை செயல்படுத்தப்பட … Read more

உ.பி, கேரளா, பஞ்சாப் இடைத்தேர்தல் தேதி மாற்றம்: நவ.20-ல் வாக்குப் பதிவு

புதுடெல்லி: பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நவம்பர் 20-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, கேரளாவில் 1 என மொத்தம் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 20-ம் தேதியும், வாக்கு … Read more

என்ன நடக்கிறது திருவொற்றியூர் தனியார் பள்ளியில்? பள்ளி கூடமா? வாயு கூடமா?

Thiruvotriyur School Gas Leak | திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மாணவிகள் மீண்டும் வாந்தி மயக்கம் எடுத்து மயக்கமடைந்ததால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். 

விடுதலை 2ஆம் பாகம் திரைப்படம் டிசம்பர் 20 வெளியீடு

சென்னை வரும் டிசம்பர் 20 ஆம் தேதி அன்று விடுதலை 2 ஆம் பாகம் திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘விடுதலை’. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் … Read more

Honda amaze teased – புதிய 2025 ஹோண்டா அமேஸ் டீசர் வெளியானது

இந்தியாவின் பிரபலமான செடான் கார்களில் ஒன்றான ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் காரின் புதிய தலைமுறை அதாவது மூன்றாவது தலைமுறை மாடலுக்கான டீசரானது வெளியிடப்பட்டிருக்கின்றது. வரும் மாதங்களில் இந்த மாடலின் விற்பனை துவங்க உள்ளதால் இதே நேரத்தில் புதிய டிசையர் காரும் கடுமையான சவாரி ஏற்படுத்த நவம்பர் 11ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ளது புதிய தலைமுறை அமேஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றிருக்கும் குறிப்பாக ஸ்டைலிங் சார்ந்த மேம்பாடுகளில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஹோண்டா சிவிக் … Read more

Career: இந்திய ரிசர்வ் வங்கியில் துணை ஆளுநர் பணியிடம்; யார், யார் விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன வேலை? துணை ஆளுநர். மொத்த காலி பணியிடம்: 1 வயது வரம்பு: 60 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது. சம்பளம்: ரூ.2,25,000 பணிக்காலம்: மூன்று ஆண்டுகள். அதற்கு மேலும் பணிக்காலம் நீட்டிக்கப்படலாம். இந்திய ரிசர்வ் வங்கியில் காத்திருக்கிறது துணை ஆளுநர் பணி! தகுதி: (ஏதேனும் ஒன்று) பொது நிர்வாகத்தில் அரசிலோ அல்லது செயலாளர் அளவிலோ குறைந்தது 25 ஆண்டுக்கால அனுபவம் வேண்டும். இந்தியா அல்லது சர்வதேச பொது நிதி … Read more

டிசம்பர் முதல் வாரத்தில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. வழக்கமாக ஜனவரி மாதம் நடைபெற வேண்டிய ஆண்டு முதல் கூட்டம், இந்தாண்டு புயல், மழை மற்றும் நிவாரணப் பணிகளால் தாமதமாகியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று, பிப்.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையுடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. … Read more